போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! அரசு பேருந்துக்களில் முன்பதிவு லட்சத்தை தாண்டியுள்ளது!

0
318
The information published by the Transport Corporation! Reservations in government buses have crossed one lakh!
The information published by the Transport Corporation! Reservations in government buses have crossed one lakh!

போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! அரசு பேருந்துக்களில் முன்பதிவு லட்சத்தை தாண்டியுள்ளது!

விழா நாட்கள் தொடங்கினால் வெளியூர்களில் இருப்பவர்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் தான்.அந்த வகையில் சென்னையில் இருந்து அதிகளவு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இருக்க சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகின்றது.மேலும் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்க்கா சென்னையில் ஆறு முனையங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு கட்டண பேருந்துகள் மற்றும் கூறுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது.அதனை தொடர்ந்து தீபத்திருநாள், கிறிஸ்துமஸ் போன்ற நாட்களிலும் சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நலையில் நடப்பாண்டில் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.அதனால் மக்கள் சென்னையில் பணிபுரியும் மக்கள் மற்றும் கல்வி பயின்று வரும் மாணவர்கள் விடுமுறை நாட்களுக்காகவும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கும் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதால் கூடுதலாக சிறப்பு பேருந்து இயக்க அரசு முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் சிறப்பு பேருந்திற்கு முன்பதிவு கடந்த மாதம் 12ஆம் தேதி தொடங்கியது.தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகளின் இருக்கை நிரம்பி விட்டது. மேலும் வரும் ஜனவரி 12 முதல் 14 வரை சென்னையில் இருந்து 10,749 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து 6,183 பேருந்துகளும் தமிழகம் முழுவதும் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சென்னையில் இருந்து 1.62லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துக்களில் செல்ல முன்பதிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும் மூன்று நாட்களில் 24 மணி நேரமும் சென்னை இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Previous article“மக்களே அலார்ட்” புதிய வகை கொரோனா வைரஸ் ஒருவருக்கு உறுதி! உங்கள் ஊரிலானு பாருங்கள்!
Next articleமக்களே எச்சரிக்கை! மீண்டும் படையெடுக்கும் மெட்ராஸ் ஐ!