கிறிஸ்தவ மதகுரு பாஜக மற்றும் மோடியை ஆதரித்து பேசிய விவகாரம்! சமூக வலைத்தளத்தில் வைரல்

Photo of author

By Savitha

கிறிஸ்தவ மதகுரு பாஜக மற்றும் மோடியை ஆதரித்து பேசிய விவகாரம்! சமூக வலைத்தளத்தில் வைரல்

Savitha

Updated on:

கிறிஸ்தவ மதகுரு பாஜக மற்றும் மோடியை ஆதரித்து பேசிய விவகாரம்! சமூக வலைத்தளத்தில் வைரல்

கேரள மாநிலம் கோட்டையம் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிறிஸ்தவ மதத்தின் மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சபை குன்னங்குளம் பேராயர் கி வர்கீஸ் மார் யூலீயோஸ் பாஜக கேரள மாநில நிர்வாகி கறி என்பவரிடம் உரையாடல் மேற்கொண்டார்.

அப்போது யாராவது ஏதாவது நடவடிக்கைகள் மேற்கொண்டால் அவை அனைத்தும் மோடியோ பாஜகவோ மேற்கொண்டதாக குற்றஞ்சாற்றுவதை தன்னால் ஏற்க முடியாது எனவும் உயிரிழந்தது கீஜகன் என்றால் கொலை செய்தது பீமன் தான் என்ற நிலைப்பாடு சரியல்ல எனவும் கூறியுள்ளார்.

மேலும் கொல்கத்தாவில் கன்னியர்களின் மடத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிராக தான் உட்பட ஏராளமானோர் கண்டனம் தெரிவித்தாலும் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் வங்காளதேசத்தில் இருந்து வந்த சிலர் தான் என்பது பின்னால் தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டார்.

சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக செயல்படுவதாக கேரளாவில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் பாஜக மற்றும் மோடிக்கு ஆதரவாக கிறிஸ்தவ மத குரு ஒருவர் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.