மருத்துவரின் காரை உரசிய அரசு பேருந்து!! தட்டிக்கேட்ட மருத்துவரை தாக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்!!

சாலையில் முந்தி செல்வதில் மருத்துவரின் காரை உரசிய அரசு பேருந்து தட்டிக்கேட்ட மருத்துவரை தாக்கிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர்.

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து காரில் உரசியதால் அதனை தட்டிக்கேட்ட மருத்துவரை தாக்கிய சமத்துவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோடம்பாக்கம் யூனிடெட் காலனியை சேர்ந்தவர் மருத்துவர் சிவானந்தகுமார்(42). தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் ONGC-ல் காண்ட்ராக்டில் நான்கு வருடமாக மருத்துவராக பணிபுரிந்து வந்து தற்போது VRS பெற்றுவிட்டார்.

இன்று மதியம் தனது காரில் தனது மனைவி மற்றும் மகளுடன் ஆற்காடு ரோட்டில் இருந்து டாக்டர் அம்பேத்கர் சாலை வழியாக செல்வதற்கு பவர் ஹவுஸ் அருகே காரை ஓட்டி வரும்போது காருக்கு இடது பக்கமாக வந்த தடம் எண் 17 D பாரிமுனையில் இருந்து கே கே நகர் நோக்கி செல்லும் அரசு பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் காரின் இடது பின்பக்க டயர் மற்றும் காரின் பக்கவாட்டில் லேசாக உரசியவாறு சென்றதால், மருத்துவர் ஓட்டுனரிடம் ஒழுங்காக பேருந்தை ஓட்டிச் செல்லுங்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

அவரை விடாமல் பின் தொடர்ந்து மாநகரப் பேருந்தை ஒட்டி வந்த ஓட்டுநர் காரை அனைத்தவாறு நிறுத்தி மருத்துவரை கீழே இறங்கி வரச் சொல்லி ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் தகராறு செய்து கையால் அடிக்கும் போது ,மருத்துவரின் மனைவி செல்போனில் படம் பிடித்துள்ளார்.

அதனையும் பிடுங்க முயற்சி செய்து அவரை தகாத வார்த்தைகளால் பேசி,மருத்துவரை கீழே தள்ளி விட்டதில் இடது காதில் ரத்த காயமும் , வலதுகால் முட்டி ,இடது கை முட்டியில் காயத்தை ஏற்பட்டது உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு கீழ்பாக்கம் மருத்துவமனை கொண்டு புறநோயாளி சிகிக்சை பிரிவில் பெற்று வீடு திரும்பினார்.

தன்னை தாக்கிய ஓட்டுநர் நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.