ரூ.150 கோடியை அசால்ட்டாக தட்டி தூக்கிய ஜெயிலர்! ஆல் ஏரியாவிலும் நம்பர் ஒன்!

0
31

ரூ.150 கோடியை அசால்ட்டாக தட்டி தூக்கிய ஜெயிலர்! ஆல் ஏரியாவிலும் நம்பர் ஒன்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரஜினியின் 169 வது படம் ‘ஜெயிலர்’.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் ரஜினியை தவிர்த்து ரம்யா கிருஷ்ணன்,விநாயகன்,வசந்த் ரவி, மோகன்லால், சுனில், சிவராஜ் குமார்,தமன்னா, யோகிபாபு, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

தமிழகத்தில் ரசிகர்களின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.இதனால் அன்று காலை 9 மணிக்குத் தான் ஜெயிலர் திரையரங்குகளில் திரையிடப்பட்டது.வார வேலை நாள் என்றபோதிலும் சுமார் இரண்டு வருடங்களுக்கு பின் ரஜினி அவர்களின் படம் வெளியான காரணத்தால் முதல் நாளிலேயே டிக்கெட்களுக்கு கடும் டிமாண்ட் இருந்தது.

மேலும் படம் பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இப்படம் நல்ல கம்பேக் கொடுத்துள்ளது என்று தெரிவித்து வருகின்றனர்.மேலும் படம் சிறப்பாக இருக்கிறது என்று இயக்குநர் நெல்சனை பாராட்டி தள்ளி வருகின்றனர்.தற்பொழுது உலகம் முழுவதும் 4000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

மேலும் இந்தியா முழுவதும் இப்படம் முதல் நாளில் சுமார் ரூ.55 கோடிக்கும் மேல் வசூலித்தது. தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூல் ரூ.25 கோடி என்றிருந்தது.மேலும் உலக அளவில் முதல் நாளில் ரூ.70 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது என்ற தகவல் வெளியானது.இந்நிலையில் ஜெயிலர் படம் வெளியாகி நேற்றுடன் 4 நாட்கள் நிறைவடைந்த நிலையில் இதுவரை உலகளவில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மாஸ் நடிகர்கள் என்று சொல்லப்படும் விஜய்,அஜித் போன்றவர்களை ஓரங்கட்டி வசூல் சக்கரவர்த்தி என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார் ரஜினிகாந்த்.