மலச்சிக்கலை தீர்க்கும் சூரிய காந்தி விதைகள்… இதன் மற்ற நன்மைகள் என்னென்ன… 

0
43

மலச்சிக்கலை தீர்க்கும் சூரிய காந்தி விதைகள்… இதன் மற்ற நன்மைகள் என்னென்ன…

 

உடலுக்கு பல நன்மைகளை தரும் சூரிய காந்தி விதைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வேம். இதில் என்ன சத்துக்கள் இருக்கின்றது என்னென்ன நோய்களை குணப்படுத்தும் என்று தெரிந்து கொள்வோம்.

 

சூரியகாந்தி பூவில் இருந்து நமக்கு கிடைக்கும் சூரியகாந்தி விதைகள் பல நன்மைகளை நமக்கு கொடுக்கின்றது. மேலும் பல ஊட்டச்சத்துக்கள் இந்த சூரியகாந்தி விதைகளில் உள்ளது. சூரியகாந்தி எண்ணெய் இந்த விதைகளில் இருந்து தயாரிக்கப்படுகின்றது என்றாலும் எண்ணெயை  பயன்படுத்தும் பொழுது தீமைகள் கிடைக்கும். ஆனால் சூரிய காந்தி எண்ணெய் தயாரிக்கப் பயன்படும் இந்த விதைகளை நாம் சாப்பிடும் பொழுது நம் உடலுக்கு பலச் சத்துக்கள் கிடைக்கின்றது.

 

சூரிய காந்தி விதையில் உள்ள சத்துக்கள்…

 

சூரிய காந்தி விதையில் நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் இ, கார்போஹைட்ரேட், நியாசின், இரும்புச்சத்து, வைட்டமின் பி6, ஜிங்க், மெக்னீசியம், காப்பர், செலீனியம், மாங்கனீசு போன்றச் சத்துக்கள் உள்ளது.

 

சூரிய காந்தி விதைகளை சாப்பிடும் பொழுது கிடைக்கும் நன்மைகள்…

 

* நம்மில் பெரும்பாலானோருக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனையை சூரியகாந்தி விதைகள் சரி செய்து கொடுக்கின்றது.

 

* சூரியகாந்தி விதைகளில் உள்ள நொதிகள் நம் செரிமான மண்டலத்தை சீர்படுத்துகின்றது.

 

* சூரியகாந்தி விதைகள் நம் வயிறு, குடல் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துகின்றது. மேலும் குடல் நோய்கள் வராமல் தடுக்கின்றது.

 

* சூரியகாந்தி விதைகளை நாம் சாப்பிட்டு வரும் பொழுது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்து வெளியேறிவிடும்.

 

* சூரியகாந்தி விதைகளை பெண்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது பெண்களின் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரோன் ஆகிய ஹார்மோன்களின் அளவை சமநிலைப்படுத்துகின்றது. மேலும் மாதவிடாய், தைராய்டு போன்ற பிரச்சனைகளுக்கான அறிகுறிகளை நிர்வகிக்கின்றது.

 

* சூரியகாந்தி விதையில் உள்ள டயாமின் என்ற சத்து நம் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றது. மேலும் உடலுக்கு தேவையான ஆற்றலை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

 

* சூரிய காந்தி விதைகளை எடுத்துக் கொள்ளும் பொழுது உடலில் உள்ள அனைத்து கிருமிகளும் வேரோடு அழிந்து விடுகின்றது.

 

* சூரியகாந்தி விதையில் உள்ள அதிகளவு மெக்னீசியம் சத்துக்கள் நம் இதயத்திற்கு தேவையான ஆரோக்கியத்தை அளித்து இதயத்தை பலப்படுத்துகின்றது.

 

சூரியகாந்தி விதைகளை பயன்படுத்தும் முறை…

 

* சூரியகாந்தி விதைகளை பொரித்து சாப்பிடலாம்.

 

* சூரியகாந்தி விதைகளை காய்கறிகளுடன் வதக்கியும் சாப்பிடலாம்.

 

* காலை உணவுகளில் சாலெட்டுகளிலும் சூரியகாந்தி விதைகளை சேர்த்து சாப்பிடலாம்.