எடப்பாடியாருக்கு மதுரையில் வலுக்கும் எதிர்ப்பு !!!

0
125

எடப்பாடியாருக்கு மதுரையில் வலுக்கும் எதிர்ப்பு !!!

 

நேற்று மதுரை வந்த அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு எதிராக மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

வரும் 20ஆம் தேதி மதுரையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் பொன்விழா  மாநாட்டை நடத்த அக்கட்சியின் திட்டமிட்டுள்ளனர் இதற்காக விளையாட்டுக்கிழமையான நேற்று அஇஅதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் மதுரை வந்தார்.

 

குறிப்பாக எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு மதுரை, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான எதிர்ப்பு எப்போதும் உண்டு. அதற்கு காரணம் கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வராக இருக்கும் போது, எம்.பி.சி சாதி பட்டியலில் உள்ள வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீதம் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பித்தது தான்.

 

இதனால் கோவமடைந்த எம்.பி.சி பட்டியலில் உள்ள பிற சமுதாயத்தினர் கடும் கோவமடைந்தனர். குறிப்பாக மதுரை மற்றும் சுற்றுவட்டாக மாவட்டங்களில் வசிக்கும் சமுதாயத்தினரும் கோவம் அடைந்துள்ளனர்.

 

இதனால் எப்போதும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு மதுரை மண்டல மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருக்க தான் என்ன செய்கிறது. அதன் வெளிப்பாடாக முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த சிலர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மதுரை மாநகரில் உள்ள சில முக்கிய பகுதிகளில் கண்டன சுவரொட்டிகளை ஒட்டி தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர் இச்சம்பவம் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்த எதிர்ப்பு அதிமுகவின் மாநாட்டில் பிரதிபலிக்கும் எனவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது

Previous articleரூ.150 கோடியை அசால்ட்டாக தட்டி தூக்கிய ஜெயிலர்! ஆல் ஏரியாவிலும் நம்பர் ஒன்!
Next articleஅதிரடியாக விளையாடிய பிரண்டன் கிங்… டி20 தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்!!