கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்த முக்கிய வீரர்

Photo of author

By Parthipan K

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிராண்ட்ஸ்லாம் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் மற்றும் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோவும் மோதினர். ஆட்டம் தொடக்கம் முதலே ஜோகோவிச் தடுமாற்றத்துடன் விளையாடினார். இதனால் முதல் செட்டில் புள்ளிகளை இழக்க நேர்ந்தது. 5-6 என பின்தங்கிய நிலையில் இருந்ததால், ஆத்திரம் அடைந்த ஜோகோவிச் பந்தை தரையில் பின்னோக்கி வேகமாக அடித்தார்.
இதில் அந்த பந்து அங்கிருந்த பெண் லைன் அம்பயர் கழுத்தில் பட்டு அவர் காயமடைந்தார். இதனால் பதறிபோன ஜோகோவிச் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டதுடன் நிலைமையை விளக்கிக் கூறினார். இருந்தாலும் போட்டி விதிகளின் படி ஜோகோவிச் அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு இழந்தார்.