சமையல் உதவியாளர் பணிக்கு ஏப்ரல் 29 தான் கடைசி தேதி!! உடனே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!

0
2
The last date for the Cooking Assistant job is April 29th!! Do this to apply immediately!!
The last date for the Cooking Assistant job is April 29th!! Do this to apply immediately!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய உத்தரவு மையங்களில் காலியாக உள்ள 236 மேல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் அழைப்பு விடுத்திருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக இருக்கக்கூடிய 236 சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை வட்டாரம் வாரியாக நேரடியாக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் அந்த அந்த வட்டாரங்களினுடைய சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கையை பொறுத்து அந்தந்த வட்டார அலுவலகங்களில் இன சுழற்சி வாரியாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு வயது வரம்பு 21 முதல் 40 வயது வரை என்றும் வயது நிர்ணயம் குறித்த வரையில் அறிவிப்பு தேதியை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையல் உதவியாளராக பணி நியமனம் செய்யப்படுபவருக்கு தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு காலத்திற்கு பின்பு தான் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

www.tiruvallur.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மாநகராட்சி நகராட்சி போன்ற அலுவலகத்தில் பெற்று கூட விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான கடைசி நாள் ஏப்ரல் 29 மாலை 5.45 மணி வரையில் மட்டுமே என்றும் விண்ணப்பிக்க வருபவர்கள் தன்னுடைய விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் குடும்ப அட்டை இருப்பிடச் சான்று ஆதார் அட்டை ஜாதி சான்று போன்றவற்றின் நகல்களை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மாற்றுத்திறனாளி பெண்கள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் இணைக்க வேண்டும் என்றும் நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் மு பிரதாப் அவர்களால் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Previous articleஇயக்குனர் ஸ்டான்லி காலமானார்!! கண்ணீரில் திரைத் துறையினர்!!
Next articleஅக்ஷய திருதியை நாளுக்கான சூப்பர் அறிவிப்பு!! தங்கம் வாங்கணும்னா இதை தெரிஞ்சுக்கோங்க!!