முன்னணி நடிகை 20 வருடங்களுக்குப் பிறகு மாதவனுடன் இணைகிறார்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

0
103

முன்னணி நடிகை 20 வருடங்களுக்குப் பிறகு மாதவனுடன் இணைகிறார்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மாதவன் ராக்கெட்ரி படத்தில் விமர்சனம். இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் என அனைத்தையும் மாதவன் தான் செய்துள்ளார்.குறிப்பாக இந்த படத்தில் மாதவன் தான் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனாலும் இந்த படம் ரியல் நம்பி நாராயனை கதையில் கொண்டு வந்து சேர்ந்ததை பார்க்கும்போது மாதவன் ஒரு இயக்குனராக ஜெயித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இது அவரது கொரியர் பெஸ்ட் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாதவனின் மனைவியாக நடித்துள்ள சிம்ரன், கதாபாத்திரத்தின் தன்மை உணர்த்து நேர்த்தியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சிம்ரன் சமூக வலைதள பக்கத்தில் மாதவனுடன் திரைப்பயணத்தை பகிர்ந்து அதில் ஒரு புகைப்படத்தில் மூலம் வெளியிட்டுள்ளார். இவரது ராக்கெட் படத்திற்கு முன்னதாக பார்த்ததால் பரவசம் மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இவருக்கிடையே ஜோடி பலராலும் கவரப்பட்டது. மேலும் இந்த படம் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சிம்ரன் மற்றும் மாதவன் இருவரும் ராக்கெட்ரி திரைப்படத்தின் மூலம் திரையில் ஒன்றாக இணைந்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்னும் கெத்தான கதாபாத்திரத்தில் கிளைமேக்ஸில் மட்டும் வந்து மாஸ் காட்டிய சூர்யா, இந்த படத்திலும் சூரியாவாகவே சூப்பராக கேமியா ரோலில் நடித்து இருக்கிறார். இவர்களைத் தவிர சிபிஐ அதிகாரியாக வரும் கார்த்திக் குமார், ஜெகன் ஆகிய வரையும் நடிப்பும் கவனம் ஈர்க்கின்றன. மேலும் தற்போது சிம்ரன் பதிவிட்டுள்ள அந்த செல்பி புகைப்படம் இணையதளத்தில் ட்ரெண்டாகி உள்ளது. ராக்கெட்ரி நம்பி எபெக்ட் படத்திலும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நம்பியாக சிம்ரன் மற்றும் மாதவனின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

author avatar
CineDesk