தளபதிக்கு வில்லனாகும் தல! விஜய்-68 படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு
தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் விஜய்.இவர் கைதி,விக்ரம் போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.மேலும் இப்படத்தில் விஜய் அவர்கள் பாடிய ‘நான் ரெடி’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் இப்படத்தின் ப்ரோமோ விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து விஜய்யின் அடுத்த படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார் என்ற அதிகார பூர்வ தகவல் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.மேலும் இப்படத்திற்கு விஜய் 68 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.மேலும் இப்படத்திற்கு ‘யுவன் சங்கர் ராஜா’ இசையமைக்க உள்ளார்.கல்பாத்தி எஸ் அகோரமின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு விஜய் ரூ.200 கோடி வரை சம்பளம் பெறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தின் அதிகாரபூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கபட வில்லை என்றாலும் அடுத்த ஆண்டு 2024ல் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகின்றது.மேலும் வெங்கட் பிரபு அஜித்தை வைத்து இயக்கிய ‘மங்காத்தா’ படம் வெற்றி படம் என்பதால் தற்பொழுது விஜய்யை வைத்து இயக்க உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி வருகின்றது.மேலும் இப்படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றது.இந்நிலையில் தற்பொழுது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தரும் விதமாக ஒரு புது தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றது.அது என்னவென்றால் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக கிரிக்கெட் ஜாம்பவான் தோனி அவர்கள் நடிக்க உள்ளார் என்பது தான். இதனால் ‘தளபதி’ விஜய் மற்றும் ‘தல’ தோணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.மேலும் தோனி அவர்களின் நடிப்பை திரையில் காண இருவரின் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் தல தோனி அவர்கள் ‘தோனி எண்டர்டெயின்மென்ட்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ‘எல்ஜிஎம்’ என்ற தமிழ் படத்தை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.