திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு ஊன்றுகோல்… திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு…

0
44

 

திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு ஊன்றுகோல்… திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு…

 

திருமலை திருப்பதியில் மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு ஊன்று கோல் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 

சமீபத்தில் திருமலை திருப்பதியில் மலைப் பாதை வழியாக குடும்பத்தினருடன் நடந்து சென்ற சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றது. இதையடுத்து திருப்பதி வனத்துறையினரும் அரசும் பல தடுப்பு நடவடிக்கைகளையும் விதிமுறைகளையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சில ஓரிரு நாட்களுக்கு முன்னர் சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது. இதையடுத்து திருமலை திருப்பதியில் மலைப் பாதை வழியாக சுவாமி தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு ஊன்று கோல் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் “அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு அகிய நடைபாதைகளில் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களுடன் நடந்து செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இரவு 10 மணிவரை பெரியவர்கள் மலைப் பாதை வழியாக நடந்து செல்ல அனுமதிக்கப் படுவார்கள்.

 

திருப்பதியில் மலைப் பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு ஊன்றுகோல் வழங்கப்படும். இந்த ஊன்றுகோலை பயன்படுத்தி வனவிலங்குகளை விரட்டவும், பக்தர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும் செய்ய முடியும். பக்தர்களை பாதுக்காக்க வனத்துறையின் கீழ் வனப் பணியாளர்களை வேலைக்கு வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

 

நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களை குழுக்களாக அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். மேலும் வனவிலங்குகளுக்கு உணவு கொடுப்பவர் மீதும், உணவு விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

பக்தர்கள் செல்லும் நடைபாதை வழிகளில் 500 சிசிடிவி கேமாரக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தேவைப்படும் பொழுது ஆளில்லா விமானங்களும் கண்காணிப்பு பணியில் பயன்படுத்தப்படும்.

 

சாலைகளில் இரண்டு ஓரங்களிலும் வேலி அமைப்பது தொடர்பாக வனத்துறையின் மத்திய மாநில அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வு செய்து முடிந்த பிறகு அதிகாரிகள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளது.