தலைவர் சென்ற கார் திடீர் விபத்து !..பல மீட்டர் வரை இழுத்து சென்ற லாரி !..தலைவர் நிலைமை?..
உத்தரபிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சியின் மெயின்புரி மாவட்ட தலைவராக இருப்பவர் தேவேந்திர சிங் யாதவ்.இவர் நேற்று காலை கட்சி சமந்தமாக நடந்த கூட்டத்திற்கு சென்லுள்ளார்.கட்சி வேலை முடித்த பிறகு மாலை அலுவலகத்திலிருந்து தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
நன்றாக சென்ற கார் திடிரென்று அவரின் கார் மீது அதிக சத்தத்துடன் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று அந்த காரின் முன் பகுதியில் பலமாக மோதியது. இதில் 500 மீட்டர் தூரம் வரை அந்த காரை இழுத்து சென்று நின்றது.இந்த விபத்தில் பலத்த சேதமடைந்த காருக்குள் சிக்கியிருந்த தேவேந்திர சிங்கை அங்கிருந்தவர்கள் மீட்டனர்.
இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக வழக்குபதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மெயின்புரி தெரிவிக்கையில் எஸ்.பி.சமாஜ்வாதி கட்சி தலைவரின் கார் மீது லாரி மோதியதில் 500 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்றது.
இந்த சம்பவத்தில் இட்டா பகுதியை சேர்ந்த டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.