நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றாத தாசில்தாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

0
201
#image_title

நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றாத தாசில்தாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திக்கேயன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்றாத அம்பாசமுத்திரம் தாசில்தாருக்கு 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் முறையாக பின்பற்றுவதில்லை அதிகாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராமசுப்பு என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ” திருநெல்வேலி மாவட்டம் மேல அம்பாசமுத்திரம் கிராமத்தில் ஆனந்த குளம் என்ற குளம் அமைந்துள்ளது. இந்த குளமே கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்திற்கான நீர் ஆதாரமாகவும் செயல்பட்டு வருகிறது.

எனவே குளத்தை சுற்றி இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தேன். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறி உத்தரவிட்டிருந்தனர்.

நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த கால அவகாசம் நிறைவுற்ற பிறகும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நீதிமன்ற உற்றவை நிறைவேற்றாத மாவட்ட ஆட்சியர் கார்த்திக்கேயன் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.விசாரணையின் போது அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையர் மற்றும் தாசில்தார் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அப்போது நீதிபதிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும் என இந்த நீதிமன்றம் உத்தரவிட்டும் கால அவகாசம் முடிவுற்றது. இன்று வரையில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை ஏன் என கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கு மட்டுமில்லை பல்வேறு வழக்கில் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் உத்தரவுகளை முறையாக பின்பற்றுவதில்லை. அதிகாரிகளுக்கு நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது.

நீதிமன்ற உத்தரவை பின்பற்றபட வில்லை என நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்து அவமதிப்பு நோட்டிஸ் வழங்கியும், இன்று வரை உத்தரவு நிறைவேற்றுவது குறித்து எந்த பதிலும் இல்லை. இது ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அம்பாசமுத்திரம் தாசில்தாருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.

இந்த அபராத தொகை உயர்நீதிமன்ற சித்த மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்றும் உத்தரவுகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்கள்.

Previous articleஅன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து ஒருவர் மாயமான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
Next articleசாலையோர மீன்கடைகள் அகற்றம்! மீனவர்கள் போராட்டம் – சீமான் ஆதரவு