பெண்ணுக்கு நிர்வாணமாக இருக்கும் வீடியேவை அனுப்பிய நபர்… திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாக புகார் அளித்த பெண்!!

0
36

 

பெண்ணுக்கு நிர்வாணமாக இருக்கும் வீடியேவை அனுப்பிய நபர்… திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாக புகார் அளித்த பெண்…

புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவருக்கு நிர்வாணமாக இருக்கும் வீடியோவை அனுப்பி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய வாலிபரை பெண் அளித்த புகாரின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

 

புதுச்சேரியை சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு சென்னையை சேர்ந்த வாலிபருடன் செல்போன் செயலி மூலமாக அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நாட்கள் செல்ல செல்ல இளம்பெண்ணும் வாலிபரும் அந்த செயலி மூலமாக தகவல்களை மாறிக் கொண்டனர். பின்னர் இருவரும் தொலைபேசியில் பேசி வந்துள்ளனர்.

 

இளம்பெண்ணும் வாலிபரும் நாட்கள் செல்ல செல்ல வாட்ஸ்ஆப் செயலி மூலமாக வீடியோ கால் பேசியும் வந்துள்ளனர். இதையடுத்து ஒரு கட்டத்தில் இருவரும் வாட்ஸ்ஆப் வீடியோ காலில் நிர்வாணமாகவும் பேசி வந்துள்ளனர். இதையடுத்து இளம்பெண்ணும் வாலிபரும் நிர்வாணமாக பேசிய வீடியோ காலை அந்த வாலிபர் செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார்.

 

பின்னர் அந்த வாலிபர் நிர்வாணமாக பேசிய வீடியோவை அந்த இளம்பெண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பி வைத்தார். பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதை ஏற்க மறுத்த இளம்பெண் புதுவை சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

 

இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டிய வாலிபரை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.