சென்னை தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும்… தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!!

0
74

 

சென்னை தேஜஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும்… தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு…

 

சென்னையில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் தேஜஸ் என்று அழைக்கப்படும் விரைவு இரயில் இனி தாம்பரத்திலும் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது.

 

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த தேஜஸ் விரைவு ரயில் மதியம் 12.15 மணிக்கு மதுரைக்கு செல்லும். பின்னர் மீண்டும் மதுரையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு இந்த தேஜஸ் விரைவு ரயில் இரவு 9.15 மணிக்கு சென்னையை வந்து சேரும்.

 

சென்னையில் இருந்து மதுரைக்கும் மதுரையில் இருந்து சென்னைக்கும் சுமார் 6 மணி நேரத்தில் இந்த ரயில் மூலம் பயணித்து விடலாம். இந்த தேஜஸ் விரைவு ரயில் தினந்தோறும் சென்னையில் இருந்து மதுரைக்கும், மதுரையில் இருந்து சென்னைக்கும் இரண்டு முறை இயக்கப்பட்டு வருகின்றது.

 

சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரயில் திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். இதையடுத்து தாம்பரம் ரயில் நிலையத்திலும் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

 

இதையடுத்து சோதனை முறையில் தேஜஸ் விரைவு ரயில் 6 மாதம் மட்டும் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் முன்பு அறிவித்தது. சோதனை முறையிலான அதாவது தற்காலிகமாக தாம்பரம் ரயில் நிலையத்தில் தேஜஸ் விரைவு ரயில் நின்று செல்வதற்கான கால அவகாசம் வரும் ஆகஸ்ட் மாதம் 26ம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

 

இதையடுத்து பயணிகள் தேஜஸ் விரைவு ரயிலை தாம்பரத்தில் நின்று செல்வதற்கு நிரந்தரமாக நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற தெற்கு ரயில்வே நிர்வாகம் தேஜஸ் விரைவு ரயில் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவித்துள்ளது.