நிர்வாணமாக நின்று பெண்களுக்கு ஆபாச சைகை! சென்னையில் பரபரப்பு!

0
160

நிர்வாணமாக நின்று பெண்களுக்கு ஆபாச சைகை! சென்னையில் பரபரப்பு!

மொட்டை மாடியில் மேலே நிர்வாணமாக நின்று பெண்களுக்கு ஆபாச சைகை செய்த நபரால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை திருமங்கலம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இந்த குடியிருப்பின் மொட்டை மாடியில் ஒருவர் உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் நிர்வாணமாக நடமாடியுள்ளார்.

மொட்டை மாடிக்கு வரும் பெண்களுக்கு ஆபாச முறையில் சைகை செய்துள்ளார். இதனால் பயந்து போன பெண்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமங்கலம் போலீசார் மொட்டை மாடிக்குச் சென்று பார்க்கையில் அவர் நிர்வாணமாக நடமாடுவதை கண்டு அதிர்ச்சியுற்றனர். உடனே அந்த நபரை காவலர்கள் பிடித்தனர்.

அப்போது அவர் பாதிக்கப்பட்டவர் போல் நடந்து கொண்டார் என்று தகவல்கள் கூறப்படுகிறது.
காவலர்கள் அவருக்கு உடையை அணிவித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் அவர் அதே குடியிருப்பில் வசிக்கும் மதுரையை சேர்ந்த ராஜேந்திரன் என்பதும், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.இதனையடுத்து போலீஸார் அவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Previous article21 ஆண்டுகளுக்கு முன் முதல்வன் படத்தில் நடிக்க மறுத்த தளபதி விஜய்!  ரகசியத்தை வெளியிட்ட இயக்குனர் சங்கர்!
Next articleடாப் ஹீரோயின்ஸ்கே டஃப் கொடுக்கும் ரம்யா பாண்டியன்!கறுப்புநிற ஹாட் போட்டோ ஷூட் !