கோயில் அருகே சிறுநீர் கழித்த விவகாரம்.. தட்டி கேட்ட சிறுவன் கொடூரக் கொலை!!

0
122
#image_title

கோயில் அருகே சிறுநீர் கழித்த விவகாரம்.. தட்டி கேட்ட சிறுவன் கொடூரக் கொலை!!

கேரள மாநிலம்,திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டாக்கடை பூவச்சல் பகுதியைச் சேர்ந்த அருண்குமார்,ஷீபா தம்பதிக்கு ஆதிசேகர் (15) என்ற மகன் உள்ளார்.அவர் காட்டாக்கடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி பூளிக்கோடு கோயில் அருகே ஆதிசேகர் அவருடைய நண்பர் ஒருவருடன் விளையாடிவிட்டு சைக்கிளில் மாலை சுமார் 5 மணியளவில் வீட்டுக்குச் செல்ல முற்பட்டார்

இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பிரியரஞ்சன் என்பவர் ஓட்டிச் சென்ற எலெக்ட்ரிக்கல் கார் ஆதிசேகர் மீது மோதி அவர் மேல் ஏறி இறங்கி இருக்கிறது.இதனால் சம்பவ இடத்திலேயே ஆதிசேகர் உயிரிழந்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆதிசேகர் உயிரிழந்ததை முதலில் விபத்து என காவல் துறையினர் வழக்கு பதித்திருந்தனர்.இந்நிலையில்கார் விபத்தை ஏற்படுத்திய பிரியரஞ்சன் கடந்த சில
தினங்களுக்கு முன் காட்டாக்கடை பூவச்சல் பகுதியில் உள்ள கோயில் அருகே சிறுநீர் கழித்தார்.அதனை கண்ட தங்கள் மகன் ஆதிசேகர் கோயில் முன் இவ்வாறு செய்யலாமா? என்று கேள்வி எழுப்பினார்.இதனால் ஏற்பட்ட அவமானத்தால் பிரியரஞ்சன் தங்கள் மகன் மீது அதிகப்படியான கோபத்தில் இருந்துள்ளான்.

இதனால் பழி வாங்கவேண்டும் என்பதற்காக பிரியரஞ்சன் தங்கள் மகன் ஆதிசேகர் மீது கார் ஏற்றி கொலை செய்திருக்கிறான் என்று பெற்றோர் காவல் நிலையத்தில் குற்றம் சாட்டினர்.பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பவம் நடந்த பகுதிதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அந்த பதிவில் சிறுவன் ஆதிசேகரை திட்டமிட்டு தான் பிரியரஞ்சன் கார் ஏற்றி கொலை செய்திருக்கிறான் என்பது உறுதியானதை தொடர்ந்து விபத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.இதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள கொலையாளி பிரியரஞ்சனை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

Previous articleவெறிச்சோடிய மைதானம்…. – பாக். கிரிக்கெட் வாரியத்தை விளாசிய முத்தையா முரளிதரன்!
Next articleஇந்தியன் 2 திரைப்படத்துடன் மோதும் புஷ்பா 2!!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!!