மழை பெய்யும் பகுதிகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள வானிலை ஆய்வு மையம்!

0
138

மழை பெய்யும் பகுதிகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள வானிலை ஆய்வு மையம்!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தூத்துக்குடி, புதுகோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

செவ்வாய்கிழமையன்று தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். புதன் கிழமையன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மீவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.

Previous articleபீஸ்ட் படத்தின் புதிய வெளியீடு! ஐந்து மொழிகளில் வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!!
Next articleபேருந்துகள் இயங்கவில்லை! நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தின் எதிரொலி!!