அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அமைச்சர்!!! அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி!!!

0
63
#image_title

அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட அமைச்சர்!!! அதிர்ச்சியில் உறைந்துள்ள எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி!!!

உணவுத்துறையில் முறைகேடு செய்தது தொடர்பாக நேற்று(அக்டோபர்26) மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா அவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்நிலையில் இன்று(அக்டோபர்27) அதிகாலை மேற்கு வங்க மாநில அமைச்சர் ஜோதிப்ரியா அவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பல மாநிலங்களில் கடந்த சில மாதங்களாகவே அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றது. விசாரணையின் முடிவில் கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் அமலாக்கத்துறை நடத்திய தீவிர விசாரணையில் மதுபான ஊழல் வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதே போல போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களையும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

அதே போல திமுக கட்சியின் மூத்த அமைச்சர் பொன்முடி அவர்களின் வீட்டில் இரண்டு நாட்கள் தீவிரமான சாதனை செய்தது. இதையடுத்து அமைச்சர் பொன்முடி அவர்களை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்பு விசாரணைக்கு பின்னர் விடுவித்தது.

இதையடுத்து அமலாக்கத்துறை அடுத்ததாக மம்தா பேனர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் மேற்கு வங்க மாநிலத்தை குறிவைத்து விசாணையை தொடங்கியது. இதில் அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் அவர்களிடம் விசாரணை நடத்தி இன்று(அக்டோபர்27) அவரை கைது செய்துள்ளது.

மேற்கு தங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் வனத்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் ஜோதிப்ரியா மல்லிக் அவர்கள் இதற்கு முன்பு உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

இதையடுத்து ஜோதிப்ரியா மல்லிக் அவர்கள் உணவுத்துறல அமைச்சராக இருந்த பொழுது உணவு பண்டங்கள் விநாயகம் செய்வதில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது. இதை மையமாக வைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிகா அவர்களுக்கு சொந்தமான இரண்டு வீடுகளிலும் அவருடைய உதவியாளர்கள் 8 பேரின் வீடுகளிலும் பல ஆய்வு மேற்கொண்டது.

இதையடுத்து அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் அவர்கள் இன்று(அக்டோபர்27) அதிகாலை அமலாக்கத்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் அவர்களுக்கு நெருக்கமான ஒரு நபர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்படும் பொழுது செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜோதிப்ரியா அவர்கள் “மிகப்பெரிய ஒரு சதிக்கு நான் பலிகடாவாக ஆக்கப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்தார். எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் உள்ளது. இந்நிலையில் இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் அமைச்சர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டு வருகின்றார்கள். இது இந்தியா கூட்டணியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.