அனைவராலும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம்! பாலிவுட் நடிகரை போல் மாறிய நடிகர்!

0
79
The most anticipated movie of all! An actor who turned out to be a Bollywood actor!
The most anticipated movie of all! An actor who turned out to be a Bollywood actor!

அனைவராலும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம்! பாலிவுட் நடிகரை போல் மாறிய நடிகர்!

ஆர்யா என்றால் பலருக்கும் மிகவும் பிடித்த நடிகர். இவர் கேரளாவில் பிறந்து இருந்தாலும் சென்னையில் படித்து வளர்ந்தவர். 2003 ல் முதல் படம் கைஎழுத்து இட்டார். அந்த படம் தாமதமாக வெளி வந்தாலும், இரண்டாவது படத்தின் ஒரு பாடலின் மூலம் அவர் மிக பிரபலமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும், 2018 ல் கலர்ஸ் தொலைக்காட்சியின் மூலம் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் அவர் இன்னும் பிரபலமானார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த படத்துக்கு சார்பட்டா பரம்பரை என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். இதற்காக அவர் ஒரு வருட காலமாக குத்துச்சண்டை பயிற்சி பெற்று, தனது உடலை, பாலிவுட் கதாநாயகன் போல் மாற்றியுள்ளார். அவருடைய கடின உழைப்புக்கு கைமேல் பலன் கிடைத்து இருக்கிறது படம் எப்போது திரைக்கு வரும் என்று ஆவல் கோலிவுட்டில் அனைவருக்கும் உருவாகியிருக்கிறது.

இதுவரை ஆர்யா படங்கள் வியாபாரமாகி இருந்ததை விட இந்த படம் மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகி இருக்கிறது. இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாகவும், கதாநாயகியாகவும் துசாரா நடித்திருக்கிறார். பசுபதி மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் கலையரசன், ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா ஆகியோரும் உடன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

படத்தின் முக்கிய பலமே சண்டைக்காட்சி தான் என்பதால் தேசிய விருது பெற்ற இரட்டையர்கள் அன்பறிவு சண்டைக் காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார்கள், என்றும் வடசென்னையில் வசிக்கும் மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாத குத்துச் சண்டையை மையமாக கொண்ட கதை இது எனவே  அனல் பறக்கும் சண்டை காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளன என்றும் டைரக்டர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.