இணையத்தை தெறிக்க விட்ட வலிமை மோஷன் போஸ்டர்!! ரசிகர்கள் ஆரவாரம்!

0
86

கோலிவுட்டில் முன்னணி நடிகராகவும், அனைவருக்கும் பிடித்த நடிகராகவும் வலம் வருபவர் தல அஜித் ஆவார். இவரது நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் அடுத்ததாக வெளியாக உள்ளது.

மேலும், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி உள்ளது இந்த படம். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.

வலிமை படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிறகு தற்போது மீண்டும் ஹைதராபாத்தில் மிக வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக இந்த படத்தின் எந்த விதமான ஒரு அப்டேட்டையும் படக்குழு வெளியிடாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்பது போன்ற தகவல்கள் நம்பத்தகுந்த சில வட்டாரங்களில் இருந்து வெளியாகியது.

இதன் காரணமாக தற்போது ரொம்ப மாஸாக வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி உள்ளது. படத்தின் மோஷன் போஸ்டருக்கு இவ்வளவு காத்திருப்பு தவறே இல்லை, தரமான சம்பவம் இருககு என்று அஜித் ரசிகர்கள் வலிமை படத்தினை உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடி வருகின்றனர்.

மேலும், ”எங்க தல போஸ்டரே கலகட்டுது, அப்போ படம் வேற லெவெல்ல இருக்கும். நெக்ஸ்ட் படத்துக்காக தான் வெயிட்டிங்” என கூறுகின்றனர். இதன் மூலமாக வலிமை படத்தினை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாட போகின்றனர் என தெரிகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை போல படமும் அமையும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

author avatar
Jayachithra