தள்ளாத வயதில் மகனின் உடலை வண்டியில் வைத்து தள்ளிச்சென்ற தாய்!! ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தொடரும் அவலநிலை!!

0
115
The mother left her son's body in the cart at a tender age!! Unable to get an ambulance, the situation continues!!
The mother left her son's body in the cart at a tender age!! Unable to get an ambulance, the situation continues!!

தள்ளாத வயதில் மகனின் உடலை வண்டியில் வைத்து தள்ளிச்சென்ற தாய்!! ஆம்புலன்ஸ் கிடைக்காமல் தொடரும் அவலநிலை!!

இறந்த  மகனின் உடலை அவரது தாய் தள்ளு வண்டியில் ஏற்றி சென்ற அவல நிலை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியை சேர்ந்தவர் ராஜு. இவருக்கு ஒரு சகோதரனும் தாயும் உள்ளனர். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள மதுக்கடை அருகே ராஜு இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரது உடல் பல மணி நேரமாக அங்கேயே இருந்ததால் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக்கேட்டு அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்ததோடு மட்டுமில்லாமல், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை பார்த்து கதறி அழுதுள்ளனர்.

இறந்து போன ராஜீவிற்கு இறுதி சடங்கு செய்வதற்காக சுடுகாட்டுக்கு எடுத்துச்செல்ல வாகன உதவியை அவரது தாயும், சகோதரரும் நாடியுள்ளனர். ஆனால் கொடூர நிகழ்வாக ராஜுவின் உடலை எடுத்துச் செல்ல எந்த வாகனமும் கிடைக்கவில்லை. நேரம் கடந்த நிலையில் ராஜூவின் உடலை அவரது தாயும், சகோதரனும் தள்ளு வண்டியில் ஏற்றி பலமணி நேரமாக தள்ளிக் கொண்டு சென்ற வீடியோ வலைத்தளங்களில் பரவி வைரலானது.

பலரும் இந்த சம்பவம் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வாகனம் கிடைக்காத நிலையில் கஷ்டப்பட்ட தாய்- மகன் இருவரும் இறுதி சடங்கு செய்வதற்கும் போதிய பணம் இன்றி கஷ்டப்பட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் உதவிக்காக அருகே உள்ள காவல் நிலையத்தை நாடி தங்களது நிலையை எடுத்துக் கூறியுள்ளனர். அப்போது பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் அமித்குமார் மாலிக் நிதி உதவி செய்ததோடு மட்டுமல்லாமல், மற்றவர்களிடம் நிதி திரட்டி இறந்து போன ராஜுவின் உடலுக்கு இறுதி சடங்கு செய்வதற்கு தன்னால் ஆன உதவிகளை செய்துள்ளார்.

அதன் காரணமாக இறுதி சடங்கு நடைபெற்றது. தொடர்ந்து வாலிபர் உடலை தள்ளுவண்டியில் ஏற்றிச் சென்ற வீடியோ வைரல் ஆனதால் மீரட் மருத்துவ கல்லூரி முதல்வர் அகிலேஷ் மோகன் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்த நிலையில்  விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. உரிய தகவல் அறிக்கை கிடைத்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Previous articleடிராவிட்டை நீக்கப்போகும் பிசிசிஐ? – வெளியான தகவல் – ஷக்கான ரசிகர்கள்!!
Next articleரசிகர்களே… உலகக் கோப்பை போட்டிக்கு கூடுதலாக 4,00,000 டிக்கெட்டுகள் விற்பனை – பிசிசிஐ வெளியீடு !!