டிராவிட்டை நீக்கப்போகும் பிசிசிஐ? – வெளியான தகவல் – ஷக்கான ரசிகர்கள்!!

0
35
#image_title

டிராவிட்டை நீக்கப்போகும் பிசிசிஐ? – வெளியான தகவல் – ஷக்கான ரசிகர்கள்

இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட்டை பிசிசிஐ நீக்கப்போவதாக தற்போது தகவல் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

சமீபத்தில் இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்களிலும்,  விராட் கோலி 4 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 14 ரன்களிலும், சுப்மன் கில் 32 பந்துகளில் 10 ரன்களும் எடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்கள்.இஷான் கிஷன் மட்டும் நிலைத்து, தனித்து விளையாடி சதம் அடித்து சாதனைப் படைத்தார்.

இதனால், இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் டிராவிட் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து வந்தார். இவருக்கு அடுத்து டிராவிட்டை தேர்வு செய்தபோது அனைவரும் வரவேற்றனர். ஆனால், டிராவிட் வந்த பிறகு சில மாதங்களிலேயே பலர் விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டனர். ஏனென்றால், கடந்த முறை நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடர் தான். அத்தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனையடுத்து, டெஸ்ட் உலகக் கோப்பை போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இதற்கு அடுத்து நடக்கவிருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் இந்தியா தோல்வி அடைந்தால், சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்களால் டிராவிட் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகி விடுவார். வருகிறது.

2023 உலகக்கோப்பை தொடருக்கு பின் டிராவிட் ஒப்பந்தம் முடிவுக்கு வருவதால் அவர்  பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்படலாம். ஒருவேளை இந்திய அணி 2023 உலகக்கோப்பை தொடரில் வெற்றி பெற்று விட்டால், இந்த விமர்சனங்களில் அவர் தப்பித்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Gayathri