இந்தியா என்ற பெயர் நம் அனைவரின் ஆழ் மனதிலும் பதிந்து விட்டதால் பாரத் என்ற பெயர் மாற்றம் தேவையற்றது – சரத்குமார் கருத்து!!

0
33
#image_title

இந்தியா என்ற பெயர் நம் அனைவரின் ஆழ் மனதிலும் பதிந்து விட்டதால் பாரத் என்ற பெயர் மாற்றம் தேவையற்றது – சரத்குமார் கருத்து!!

தமிழ் திரையுலகில் வளர்ந்த நட்சத்திரமாக வலம் வருபவர் சரத்குமார்.கடந்த 2007 ஆம் ஆண்டு
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி அக்கட்சிக்கு தலைவராக பதவி வகித்து வருகிறார்.இந்நிலையில் அக்கட்சியின் 17ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்ட விழா திருப்பூரில் நடத்தப்பட்டது.இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் நமது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு மாக்கள் மத்தியில் எந்த அளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பதை தெளிவு படுத்த கடந்த 2026 ஆம் ஆண்டு வரவுள்ள சட்டமன்ற தேர்தலில் தனித்து தேர்தலில் போட்டியிட வேண்டும். கஷ்டமோ நஷ்டமோ தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளதாக அவர் பேசினார்.

மேலும் ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டுமென்றால் 30 கோடி தேவைப்படுகிறது, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் 100 கோடி தேவைப்படுகிறது.இதனால் தேர்தலில் சீர்திருத்தம் கண்டிப்பாக தேவைப்படுகிறது.தேர்தலில் போட்டியிட இவ்வளவு பணம் செலவாகும் நிலையில் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர்அமைச்சர் உதயநிதியின் சனாதன விவகாரத்தில் வன்முறை கருத்துக்களை பரப்பிய வடமாநில சாமியாரை கைது செய்யப்பட வேண்டுமென்று கூறினார்.

மேலும் நாட்டின் முக்கிய பிரச்சனையான இந்திய மற்றும் பாரத் விவகாரம் குறித்து பேசிய அவர் இந்தியா என்ற பெயர் அனைவரது ஆழ்மனதிலும் பதிந்து விட்ட காரணத்தால் பாரத் என்ற பெயர் மாற்றம் நாட்டிற்கு தேவையற்றது என்று கூறினார்.ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் உள்ள சட்ட சிக்கல்களை தீர்த்து அதனை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.