புதிதாக “மங்கி பி” என்னும் நோய்த் தொற்று மனிதர்களுக்கு மனிதர் பரவி வருகிறது!
கடந்த மார்ச் மாதம் சீனாவைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவர் காய்ச்சல் மற்றும் தசை வலி உள்ளிட்ட பாதிப்புகளால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்,மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இரு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது உமிழ்நீர்,சளி மற்றும் ரத்தம் ஆகியவைகளின் ஆய்வுகள் முடிவின் வாயிலாக குரங்குகள் மூலம் பரவும் “மங்கி பி” என்னும் வைரஸால் பாதித்து அவர் இறந்து விட்டதாக தெரியவந்துள்ளது. இதில் ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் இந்த “மங்கி பி” வைரஸ் மனிதருக்கு மனிதர் பரவும் வகையைச் சேர்ந்தது இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
மனிதருக்கு மனிதர் பரவுவதற்கும் வாய்ப்பில்லை என்று ஆறுதல் சொல்லும் வகையில் 1932 ஆம் ஆண்டு இந்த வைரஸ் இருந்தது.இது வரைக்கும் இந்த வைரசால் 50 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டார்கள், அந்த 50 பேரில் 21 பேர் மட்டும்தான் உயிரிழந்தனர். “மங்கி பி” வைரஸ் குரங்கு ஒருவரைக் கடித்தாலோ அல்லது நகங்களால் கீறினாள் மட்டும் தான் இந்த வைரஸ் பரவும் என்கிறார்கள் மருத்துவர்கள். “மங்கி பி” வைரஸ் பாதித்த குரங்குகள் நோய் வாய்பட்டு இறந்து விடும்.இந்த வைரஸ் பாதித்த குரங்கின் சிறுநீர் மலம் மற்றும் உமிழ்நீர் ஆகியவற்றில் வைரஸ்கள் இருக்கும்.
ஆனாலும் இதுஅவ்வளவு சுலபத்தில் மனிதர்களுக்கு பரவி விடாது. வைரஸ் பாதித்த குரங்குகளிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும்போது தான் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படும் விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் ஆய்வக பணியாளர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு அதிகம் வாய்ப்பிருக்கிறது. “மங்கி பி” வைரஸ் பாதித்தால் முதலில் காய்ச்சல் தலை வலி மற்றும் தசை வலி உண்டாகும் உடல் முழுவதும் கொப்பளங்கள் உண்டாகும்,வயிற்றில் வலி மூச்சு விடுவதில் சிரமம்,வயிற்றுப்போக்கு,மூளை தண்டுவடத்தில் வீக்கம்,நரம்பு கோளாறு,மூளை செயலிழப்பு போன்றவைகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் உண்டாகும்.
“மங்கி பி”வைரஸில் இருந்து தப்பிக்க பொதுவாகவே குரங்குகள் கடித்தால் அந்த இடத்தில் உடனடியாக சோப்பு போட்டு கழுவி விட வேண்டும் 20 நிமிடங்கள் தொடர்ந்து அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றிய பின்னர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.