பள்ளி திறப்புக் குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அடுத்த அறிவிப்பு

Photo of author

By Anand

பள்ளி திறப்புக் குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அடுத்த அறிவிப்பு

பள்ளிகள் மீண்டும் திறப்பு:பிப்.,8 முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விதிமுறைகளை பின் பற்றி பள்ளிகள் செயல்படலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது..

மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது கட்டாயம் பெற்றோரின் அனுமதி கடிதம் வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது

கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் 1  ஆண்டுகாலமாக திறக்காமல்,மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களை  படித்து வந்தனர். சில தளர்வுகள் கூடிய நிலையில் மாணவர்கள் பள்ளிக்குச்சென்று வகுப்புகள் பயிலலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

முதலில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பு என அறிவித்த நிலையில் ,இப்போது 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பு என கல்வித்துறை அறிவித்துள்ளது.பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும்,அவர் அவர் பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வர வேண்டும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.