ஆசிரியர்களுக்கு விழுந்த அடுத்த அடி!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக விடுமுறை எடுத்து வருவதும், காரணமே இல்லாமால் எல்லாவற்றுக்கும் விடுப்பு எடுத்து வருகின்றனர்.
இதை தடுக்க தற்போது தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வெகு நாட்களாக பள்ளிக்கு வராமல் இருக்கின்ற ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்க அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் பணிபரியும் ஆசிரியர்கள் எந்த ஒரு காரணமும் இல்லாமல், தகவல் எதுவும் கூறாமல் விடுப்பு எடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
வெகு நாட்களுக்கு விடுப்பு எடுத்துவிட்டு பிறகு பணிக்கு வருகிறார்கள். சிலர் காரணமே இல்லமால் ஆண்டு கணக்காக விடுப்பு எடுத்துவிட்டு மாதந்தோறும் ஊதியம் மட்டும் பெற்றுக் கொள்கிறார்கள்.
இது தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, வெகு நாட்களுக்கு விடுப்பு எடுப்பவர்களின் அனைத்து விவரங்களையும் சேகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுப்போல காரணம் கூறாமல் தகவல் அளிக்காமல் நீண்ட நாட்களுக்கு விடுமுறை எடுக்கின்ற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை உடனடியாக சேகரித்து அரசுக்கு அனுப்புமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.இதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடியான உத்தரவை அறிவித்துள்ளது.