சேலம் மாவட்டத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்! அரசு பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!

0
315
the-next-shocking-incident-in-salem-district-a-student-attempted-suicide-by-jumping-from-the-second-floor-of-a-government-school
the-next-shocking-incident-in-salem-district-a-student-attempted-suicide-by-jumping-from-the-second-floor-of-a-government-school

சேலம் மாவட்டத்தில் அடுத்த அதிர்ச்சி சம்பவம்! அரசு பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!

கள்ளக்குறிச்சியில் மாணவியின் மர்ம கொலை வழக்கு போராட்டம் வன்முறையாக மாறி உள்ளது. இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த  நிலையில் அதைத்தொடர்ந்து சேலம் மாவட்டம் மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்தார். அந்த மாணவி வகுப்பறையில் சக மாணவர்களுடன் பேசாமல் மௌனமாக இருந்ததோடு வழக்கத்திற்கு மாறாக செயல்பட்டுள்ளார் எனவும் தெரிய வருகிறது.

மேலும்  இந்நிலையில் இரண்டாம் மாடியில் உள்ள அவரது வகுப்பிற்கு செல்லும் பொழுது இரண்டாவது மாடியில் இருந்து அந்த மாணவி கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் கூச்சலிட்டு ஆசிரியர்களை மற்றும் பள்ளி நிர்வாகிகள் அழைத்தனர் மேலும் அங்கு திரண்ட பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த மாணவியின் தற்கொலை முயற்சி காரணம் சரியாக தெரியாத நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் அந்த மாணவிகள் நேரில் விசாரணை நடத்தினார்கள். விசாரணைக்கு பின் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்பொழுது சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பள்ளி மாணவி இடம் முழுமையாக விசாரித்து விட்டதாகவும் குடும்ப பிரச்சனை காரணமாகவே மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் எனவும் கூறினார். இந்த மாணவி தற்கொலைக்கும் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களுக்கும் எந்த காரணம் இல்லை என்றும் தன்னுடைய இந்த தற்கொலை முயற்சிக்கும் நிர்வாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த மாணவி கூறியுள்ளார். மேலும் இரண்டாவது மாடியில் இருந்து குதித்த காரணத்தால் சிறுமியின் கால் முறிவு ஏற்பட்டுள்ளது மேலும் தாடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர் எனவும் கூறினார்.

மாணவி மன அழுத்தம் காரணமாக மட்டுமே தற்கொலை முயற்சி ஈடுபட்டதால் அவருக்கு கவுன்சிலிங் வழங்கி வருவதாகவும் கூறினார். வரும் காலத்தில் கல்வி நிறுவனங்களில் மரணங்களும் போதெல்லாம் சிபி சிஐடி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சற்று நேரத்திற்கு முன்பாக உச்சநீதிமன்ற நீதிபதி  உத்தரவுவிட்ட நிலையில் அரசு பள்ளி மாணவி ஒருவர் இரண்டாம் ஆண்டிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மாவட்ட நிர்வாக தரப்பில் விசாரணை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோர் தரப்பில் இதுவரை வேறு எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கவில்லை. இது தொடர்ந்து மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்படும் வரும்  நிலையில் மாணவியின் இந்த முடிவு குறித்து பெற்றோர்ரிடமும்  பள்ளியில் உள்ள சக மாணவிகளிடமும் விசாரணை நடந்த போலீசார் முடிவு செய்துள்ளனர் எனவும் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களிடம் கூறினார்.

Previous articleமாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய விடைத்தாள் ஆய்வாளர்கள்? அதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள்!?
Next articleகள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!