கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட அறிவிப்பு!

0
82

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படும் வழக்கில் பல அதிரடி திருப்பங்கள் வந்திருக்கின்றன. அதாவது தற்போது அந்த பள்ளியின் ஆசிரியர்கள் இந்த கலவரத்திற்கு காரணம் அந்த மாணவியின் தாய் தான் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அதே நேரம் அந்த மாணவியின் தாய் என்னுடைய மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவருடைய இறப்பில் எனக்கு சந்தேகம் இருக்கிறது என்று பள்ளி நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது தனியார் பள்ளி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், தனியார் பள்ளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தும், அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களிடம் கருப்பு வண்ண பேட்ச் அணிந்து மனு அளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இன்று தனியார் பள்ளியில் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நடுவில் தனியார் பள்ளிகளை மூடுவதற்கு எந்த விதமான முன் அனுமதியும் பெறவில்லை எனவும், பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கினால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

இது குறித்து அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் கிடைத்தது.

இந்த சூழ்நிலையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கள்ளக்குறிச்சி சக்தி மேல்நிலைப் பள்ளியில் தற்போது படித்து வரும் மாணவர்களை அரசு பள்ளிகள் மற்றும் அருகாமையில் இருக்கக்கூடிய பள்ளிகளில் சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.

தவறு யார் மீதிருந்தாலும் அவர்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இந்த விவகாரத்தை பொருத்தவரையில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வது சரியானது இல்லை. மாணவியை இழந்த பெற்றோரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

இன்று நேரடியாக மூத்த அமைச்சர் ஏ.வ. வேலுடன் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

மாணவியின் பெற்றோர் தாக்கல் செய்திருக்கின்ற வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கிறது. தீர்ப்பினடிப்படையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தமிழகத்தில் தங்களுடைய அனுமதி பெறாமல் பள்ளிகள் விடுமுறை அறிவிக்க கூடாது இன்று வழக்கம் போல தனியார் பள்ளிகள் செயல்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார் அன்பில் மகேஷ் பொய்யா மொழி.