67 வயதில் தனி மனிதராக காஷ்மீர் டு கன்னியாகுமாரி வரை சைக்கிள் பயணம்!

Photo of author

By Parthipan K

கன்னியாகுமரியில் 67 வயது முதியவர் ஒருவர் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணம் செய்து சாதனை படைத்திருப்பது பெரும் சாதனை தான்.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், வாழ்க்கையில் சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் ஶ்ரீநகரில் இருந்து சைக்கிளில் தனி மனிதராக பெரியவர் ஒருவர் 3,650 கிலோ மீட்டர் தொலைவான கன்னியாகுமரிக்கு, வெறும் 12 நாள் 18 மணிநேரத்தில் வந்து சாதனை படைத்துள்ளார் . இவர் பெயர் மொஹிந்தர் சிங் பாராஜ் வயது 67.

வயதான முதியவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் உடற்பயிற்சி மேற்கொண்டு கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவில் முதல் மனிதராக 67 வயதாகிய பெரியவர் சைக்கிளில் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்து சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அவருக்கு கன்னியாகுமரியில் வேர்ல்ட் அல்ட்ரா சைக்கிளின் அசோசியேசன் யுஎஸ்ஏ இந்த அமைப்பு மூலம் வரவேற்பு வழங்கப்பட்டது.