கள்ள காதலனை நம்பி சென்றவர்! எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பரிதாபம்!
பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பெரும் அளவு வளர்ந்து வருகிறது. சிறு பிள்ளையானாலும் விடுவதில்லை, 60 வயதான கிழவிகள் வரை எந்த பெண்களையும் சில கயவர்கள் விடுவதில்லை.
ஒன்றா காதலிக்கிறேன் நீயும் காதலி என்று கொடுமை படுத்துகின்றனர். இல்லையேல் காதலிக்கவில்லை என கொலை செய்கின்றனர். எப்படியும் பாதிக்கப் படுவது என்னவோ ஒருவிதத்தில் பெண்தான்.
அந்த வகையில், தற்போது சென்னையில் நொளம்பூர் பகுதியில், பைபாஸ் அதாவது சர்விஸ் சாலையில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் எரிந்த வண்ணம் உள்ளதாக நேற்று முன்தினம் மாலை போலீசாருக்கு தகவல் வந்தது.
இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு அந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் அந்த பெண் எரிந்த நிலையில் இருந்த இடத்தில் இருந்து, ஒரு கைப்பையை எடுத்தனர். அதன் பின் அந்தப் பையில் இருந்த அடையாள அட்டைகள் மூலம் அப்பெண் சென்னை வானகரம் பகுதியில், சக்தி சாய்ராம் நகரைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி ரேவதி 25 வயதானவர் என்பது தெரிய வந்தது.
மேலும் அவர் வளசரவாக்கம் மண்டல அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக மேற்கொண்ட விசாரணையில் அப்பெண்ணின் கள்ளக்காதலன் தான் உயிருடன் எரித்து கொலை செய்திருக்கும் அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.
ரேவதி தான் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த அதே வளசரவாக்கம் மண்டலத்தில், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான திம்மப்பா என்ற இளைஞரும் குப்பை அள்ளும் பேட்டரியில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். ஒரே இடத்தில் வேலை செய்வதால் இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டு, அதன் பின்னர் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதை தொடர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ள நிலையில், தனக்கு பணம் தேவை உள்ளது என்று திம்மப்பா ரேவதியிடம் கேட்டிருக்கிறார். தன்னிடம் பணம் இல்லை என்றும் தனது 5 பவுன் தங்கச்சங்கிலியை கொடுத்து அதை அடகு வைத்துப் பணம் வாங்கிக் கொள்ளுமாறும் கூறியிருக்கிறார்.
நிலைமை இப்படி இருக்க கடந்த 22ம் தேதியன்று நொளம்பூர் சர்வீஸ் சாலையில் உள்ள காலி இடத்தில் ரேவதியும் திம்மப்பாவும் தனிமையில் இருந்துள்ளனர். பின்னர் அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது அடமானம் வைக்க கொடுத்த தனது 5 பவுன் தங்கச் சங்கிலியை உடனே அவசர தேவைக்காக மீட்டுத் தரும்படி திம்மப்பாவிடம் ரேவதி கேட்டிருக்கிறார்.
தன்னால் இப்போது திருப்பி தர முடியாது என்று சொல்லவே, உடனே திருப்பித் தரவேண்டும் என்று கேட்டு அவரிடம் தகராறு செய்திருக்கிறார் ரேவதி. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்திருக்கிறது.
அப்பகுதி வழியே சென்றோர் அதை வேடிக்கை பார்த்துள்ளதை அடுத்து, ரேவதியிடம் இங்கு சத்தம் போட்டு பேச வேண்டாம் எல்லோரும் பார்க்கிறார்கள், வா அந்தப்பக்கம் மறைவாக போய்விடலாம் என்று கூறி அங்கிருந்த முட்புதர் அருகே அழைத்துச் சென்று உள்ளார் திம்மப்பா.
ஆனால், முட்புதர் அருகே சென்றதும் ரேவதியின் வாயில் துணியை வைத்து அவர் அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவின் மூலம் கை கால்களை கட்டி இருக்கிறார். பின்னர், தான் வைத்து இருந்த சிறிய கத்தியை எடுத்து, அதன் மூலம் ரேவதியின் கழுத்தையும் அறுத்து இருக்கிறார்.
அதில் ரேவதி அதிக ரத்தம் வெளியேறிதன் காரணமாக மயங்கி இருக்கிறார். அரை மயக்கத்தில் ரேவதி இருந்தபோது அவரை உயிருடன் தீவைத்து எரித்து விட்டு ஓடியிருக்கிறார் திம்மப்பா என்று போலீசார் தரப்பில் கூறி உள்ளனர்.