பல நோய்களுக்கு தீர்வு தரும் ஒரே மருந்து… அதை தயார் செய்ய இந்த மூன்று பொருள்கள் போதும்…

Photo of author

By Sakthi

 

பல நோய்களுக்கு தீர்வு தரும் ஒரே மருந்து… அதை தயார் செய்ய இந்த மூன்று பொருள்கள் போதும்…

 

இந்த பதிவில் சளி, இருமல், காய்ச்சல், வயிற்று வலி, தலைவலி போன்ற பல நோய்களுக்கும் தீர்வாக அமையும் ஒரு மருந்தை மூன்றே மூன்று பொருள்களை வைத்து எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.

 

பல நோய்களுக்கும் தீர்வாக அமையும் மருந்தை தயாரிக்க கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் இந்த மூன்று பொருள்களே போதும். கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் ஆகியவற்றை தனித் தனியாக பயன்படுத்தினாலே உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்நிலையில் மூன்றையும் ஒன்றாக பயன்படுத்தினால் உடலுக்கு பல நன்மைகளை இது கொடுக்கும்.

 

தேவையான பொருள்கள்…

 

* கருஞ்சீரகம்

 

* வெந்தயம்

 

* ஓமம்

 

செய்முறை

 

கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் இம்மூன்றையும் தனித்தனியாக ஒரு வாணலியில் போட்டு கறுகாமல் வறுக்க வேண்டும்.

 

பின்னர் ஓமம், வெந்தயம், கருஞ்சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த மூன்று பொடியையும் காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி வைத்துக் கொள்ளவும்.

 

இந்த பொடியை தினமும் இரவு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட வேண்டும்.

 

இந்த பொடியை பயன்படுத்தும் பொழுது தீரும் நோய்கள்…

 

* இந்த பொடியை நாம் எடுத்துக் கொள்ளும் பொழுது உடலுக்குத் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றது.

 

* இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை வழங்க வகை செய்கின்றது.

 

* இந்த பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் தேங்கி இருக்கும் நச்சுக் கழிவுகள் அனைத்தும் சிறுநீர், மலம், வியர்வை மூலம் வெளியேறிவிடும்.

 

* இந்த பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகின்றது. மேலும் இதயம் சீராக இயங்க உதவி செய்கின்றது.

 

* இந்த பொடியை நாம் சாப்பிட்டு வரும் பொழுது சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகின்றது.

 

* இந்த பொடியை நாம் தினமும் சாப்பிட்டு வரும் பொழுது உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும் ஏற்படுகின்றது.

 

* இந்த பொடியை சாப்பிட்டு வரும் பொழுது எலும்புகள் பலம் பெறுகின்றது. மேலும் எலும்புத் தேய்மானம் நீக்கப்படுகின்றது.

 

* இந்த பொடியை நாம் சாப்பிட்டு வரும் பொழுது ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்படுகின்றது. மேலும் பற்கள் வலு பெறுகின்றது.

 

* இந்த பொடியை தினமும் சாப்பிட்டு வரும் பொழுது நன்கு முடி வளர்ச்சி அடைகின்றது.

 

* இந்த பொடியை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும். மேலும் கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

 

* நாம் இந்த பொடியை சாப்பிட்டு வரும் பொழுது நமக்கு கேட்கும் திறன் அதிகரிக்கின்றது.

 

* நினைவாற்றலை அதிகரிக்கக் கூடிய சிறப்பான மருந்து இதுவாகும்.

 

* இந்த பொடியை பெண்கள் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் அனைத்து வகையான நோய்களும் குணமடைகின்றது.

 

* மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் அனைவரும் இந்த பொடியை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே இருக்காது.

 

* இந்த பொடியை சாப்பிட்டு வந்தால் நாம் ஆங்கில மருந்துகள் சாப்படும் பொழுது அதனால் வரும் பக்க விளைவுகள் நீக்கப்படுகின்றது.

 

* இந்த பொடி ஆண், பெண் சம்பந்தமான பாலியல் பிரச்சனைகளை சரியாக்கக் கூடியது.

 

* நீரிழிவு நோய் உள்ளவர்களும் இந்த பொடியை தாராளமாக சாப்பிடலாம். இதனாத் நீரிழிவு நோய் கட்டுப்படுகின்றது.

 

* இந்த பொடியை இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து சாப்பிடும் பொழுது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் சரியாகின்றது.