வீட்டிலேயே நெஞ்சு சளியை வேரோடு அகற்றலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0
102

வீட்டிலேயே நெஞ்சு சளியை வேரோடு அகற்றலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

சாதாரண சளி ஓரிரு வாரத்தில் குணமாகிவிடும்.நெஞ்சு சளி வந்தால் அவற்றை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல.ஆனால் இயற்கை முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி இந்த தீராத நெஞ்சு சளியை எளிமையாக குணப்படுத்திவிட முடியும்.

நெஞ்சு சளிக்கான அறிகுறிகள்

அதிக சளி,வறட்டு இருமல்,தலைபாரம்,நெஞ்சு எரிச்சல்,தொண்டை எரிச்சல்,சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல் மற்றும் சளியில் ரத்தம் கலந்து வெளியேறுதல் போன்றவை நெஞ்சு சளிக்கான பொதுவான அறிகுறிகளாக சொல்ல படுகின்றது.

நெஞ்சு சளியை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்தும் முறை

நாம் அன்றாடம் பயன்படுத்தும் மிக எளிய பொருட்களை கொண்டு ரசம்,சூப்,குழம்பு என உணவு மூலமாக நெஞ்சு சளிக்கு தீர்வு காண முடியும்.

1.ஆடாதோடை இலையை சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றை இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.சூடாக இருக்கும் தருணத்திலே பிழிந்து சாறு எடுக்க வேண்டும்.அதில் 50 மில்லி சாற்றில் 15 மில்லி தேன் கலந்து எடுத்து கொள்ள வேண்டும்.ஒரு வேளைக்கு 10 மில்லி என்ற கணக்கில் ஒரு நாளைக்கு ஐந்திலிருந்து ஆறு முறை குடிக்க வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் நெஞ்சு சளி மற்றும் சளியுடன் இரத்தம் வருதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்யும்.

2.நெஞ்சு சளி கட்டி இருப்பவர்கள் பூண்டு குழம்பு செய்து சாப்பிடுவது நல்லது.
சின்ன வெங்காயம்,வெள்ளை பூண்டு,சீரகம்,மிளகு,தேங்காய்,கொத்தமல்லி போன்றவற்றை சேர்த்து செய்யப்படும் பூண்டு குழம்பு மற்றும் பூண்டு ரசம் சளியை அகற்றும்.மேலும் நுரையீரல் குழாய் மற்றும் சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி மலத்துடன் வெளியேற்றும்.

3.மழை மற்றும் பனி காலங்களில் நமக்கு நெஞ்சு சளி சுலபமாக ஏற்பட்டு படுத்தி எடுக்கும்.இவற்றை குணப்படுத்த கண்டங்கத்திரியில் குழம்பு செய்து சாப்பிடுவது நல்லது.

4.நெஞ்சு சளி விரைவில் குணமாக மூலிகை கஷாயம் செய்து குடிக்கலாம்.இதனால் நீண்ட நாட்களாக பாடாய் படுத்தி வந்த நெஞ்சு சளி எளிதில் குணமாகும்.

கஷாயம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:-

*சுக்கு

*மிளகு

*தனியா

*திப்பிலி

*சித்தரத்தை

செய்முறை:-

மேல குறிப்பிட்டுள்ள பொருட்களை சம அளவு எடுத்து அவற்றை ஒரு உரலில் தட்டி எடுக்கொள்ள வேண்டும்.பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இடித்து வைத்துள்ள மூலிகை பொருட்களை சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும்.பிறகு அவற்றை ஒரு டம்ளரில் வடிகட்டி குடித்து வந்தால் கடுமையான நெஞ்சு சளி 3,4 நாட்களில் குணமடையும்.

5.சில சமயம் சளியுடன் இருமலும் சேர்த்து தொந்தரவு கொடுக்கும்.அதற்கு இஞ்சி சாறு,எலுமிச்சை சாறு,துளசி சாறு,தேன் போன்றவற்றை சம அளவு கலந்து குடித்து வருவதன் மூலம் இந்த பிரச்சனை நீங்கும்.

6.நெஞ்சு சளிக்கு கீழே குறிப்பிட்டுள்ள 3 பொருட்களை பயன்படுத்தி கஷாயம் செய்து குடிப்பதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

இஞ்சி – தேவையான அளவு (தட்டியது)

மிளகு தூள் – 1 தேக்கரண்டி

தேன் -1 தேக்கரண்டி

செய்முறை:-

டீ போடும் பாத்திரத்தை எடுத்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் தட்டி வைத்துள்ள இஞ்சி மற்றும் மிளகு துளை சேர்த்து மிதமான தீயில் ஐந்திலிருந்து ஆறு நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு ஆறவைத்து இந்த கஷாயத்தை வடிகட்டி அவற்றில் 1 தேக்கரண்டி தேன் சேர்த்து குடிப்பதன் மூலம் சளி எளிதில் அகலும்.