உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!தினம் ஒரு கொய்யாப்பழம்!
தினமும் ஒரு பழம் சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் ஏழை எளிய மக்கள் தினந்தோறும் சாப்பிடும் பழமாக வாழைப்பழத்தை அடுத்ததாக கொய்யாப்பழம் உள்ளது. மற்ற பழங்களை காட்டிலும் கொய்யாப்பழத்திற்கு என்று ஒரு தனித்துவமும் சுவையும் உண்டு. கொய்யாப்பழம் சூப்பர் ப்ரூட் எனவும் அழைக்கப்படுகின்றது.
நீரழிவு நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட மிக நன்மை ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. இதில் வைட்டமின் சி அதிகம் இருக்கின்றது. சர்க்கரைக்கு அருமருந்தாக கொய்யாப்பழம் திகழ்கின்றது. கலோரியின் அளவு மிக குறைவு. இவை உண்பதன் மூலம் இருதயத்திற்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துகின்றது. இந்தப் பழம் ரத்தத்தில் உள்ள சோடியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவை சீராக வைத்திருக்க உதவுகின்றது. கண்பார்வை மேம்படுத்துவதற்கு வைட்டமின் ஏ மிக முக்கியம் அந்த வைட்டமின் ஏ கொய்யாப்பழத்தில் உள்ளது கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யவும் கண்பார்வை திறனை மேம்படுத்தவும் உதவுகின்றது.
கொய்யாப்பழம் மற்றும் கொய்யா இலையின் சாறு பல் வலியை குணப்படுத்த உதவுகிறது பல் மற்றும் வாய் பகுதியில் ஏற்பட்டிருக்கும் அல்சர் , வீக்கம் மற்றும் பல்வலி ஆகியவற்றை சரி செய்ய கொய்யாச்சாறு மிக உதவியாக இருக்கின்றது. தினந்தோறும் ஒரு கொய்யா பழம் சாப்பிடுவதன் மூலம் மன அழுத்தம் குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.