குளிர் காலங்களில் ஏற்படும் சளி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு! இந்த மூன்று பொருட்கள் மட்டும் இருந்தால் போதும்!
தற்போது கடந்த சில நாட்களாகவே உயர்ந்த காற்று வீசி வருகின்றது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக உடல் நிலையிலும் மாற்றம் ஏற்படும். இவை காய்ச்சல் போன்ற பருவ கால நோய்களை உண்டாக்கும். குளிர் காற்று வீசும் போது நாம் வெளியில் சென்று வர முதலில் சளி ,இரும்பல் ஏற்பட்டு அவை காய்ச்சலாக மாறும்.
அவற்றிலிருந்து எவ்வாறு நம் உடலை பாதுகாத்துக் கொள்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். அதற்கு தேவையான பொருட்கள் இஞ்சி, எலுமிச்சை தோல் மற்றும் பூண்டு. இந்த பொருட்கள் சளி மற்றும் காய்ச்சலுக்கு மட்டுமின்றி சீரான இடைவெளியில் சாப்பிடும் போது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றது.
இஞ்சின் நன்மைகள்:குளிர்காலம் ஏற்படும்பொழுது இஞ்சி என்பது மிகச் சிறந்த மருந்தாக செயல்படுகின்றது. இஞ்சி தெர்மோஜெனிக் குணம் கொண்டது மற்றும் குளிர்ந்த காலநிலையில் உடலில் வெப்பத்தை உருவாக்க இஞ்சி பெரிதளவும் உதவுகின்றது.
குளிர்காலத்தில் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் வெப்பநிலை சீராக இருக்கும். இஞ்சி குளிர் காலத்தில் இறைச்சி உணவுகள் மற்றும் தேநீர் போன்றவைகளில் சேர்த்து உண்ணலாம் இவை பாக்டீரியாக்களை எதிர்க்கும் சக்தி கொண்டது அலர்ஜி ஏற்படாமலும் நம் உடலை பாதுகாக்க உதவுகின்றது.
பூண்டு:பூண்டு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது ஆனால் பூண்டை பெரும்பாலானோர் வாயில் போட்ட அப்படியே சாப்பிட விரும்ப மாட்டார்கள். பூண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றது உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது மூலம் பல உடல்நல பிரச்சினைகளிலிருந்து நாம் விடுபடலாம்.
எலுமிச்சை தோல்:குளிர்காலம் வரும்பொழுது எலுமிச்சை பழத்தை பயன்படுத்துவது மிக அவசியமான ஒன்றாகும். எலுமிச்சை குளிர்ச்சியான பொருள் என்பதால் அவை தொண்டை மற்றும் உடல் நிலையை பாதிக்கலாம். எலுமிச்சை ஒரு சிட்ரி பழம் இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதே சமயத்தில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொட்டுகளில் இருந்து நம் உடலை பாதுகாக்க உதவுகின்றது.