உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க ஒரே வழி! உளுத்தம் பருப்பு சாதம்! 

0
269

உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க ஒரே வழி! உளுத்தம் பருப்பு சாதம்!

தேவையான பொருட்கள் :முதலில் அரிசி கால் கிலோ, உளுத்தம் பருப்பு கால் கப், வெந்தயம் கால் டீஸ்பூன், தேங்காய் பால் நான்கு கப், பூண்டு பல்15, உப்பு தேவையான அளவு, கடுகு அரை டீஸ்பூன்,கறிவேப்பிலை1 கொத்து, பெருங்காயத்தூள்1 சிட்டிகை ,காய்ந்த மிளகாய்4.

செய்முறை : முதலில் அரிசி எடுத்து கழுவி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை எண்ணெய் இல்லாமல் வறுத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். ஒரு குக்கரில் அரிசி, வறுத்த உளுத்தம் பருப்பு, வெந்தயம், தேங்காய் பால், பூண்டு, உப்பு மற்றும் தாளித்தவை அனைத்தையும் போட்டு வேக விட வேண்டும்.

அதன் பிறகு மூடி போடாமல் இடையிடையே கிளறி விட வேண்டும். மேலும் அரிசி முக்கால் பாகம் வெந்ததும் குக்கர் மூடியை போட்டு வெயிட் போடாமல் 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கி விடலாம்.

 

Previous articleபங்குச் சந்தையின் நிலவரம்! இந்த நிறுவனமானது பங்குகளை உயர்த்தியுள்ளது!
Next articleஇந்த 21 இலை மற்றும் பூக்களை விநாயகருக்கு வைத்து வழிபடலாம்! இதனை செய்து பாருங்கள் எவருக்கும் கிடைக்காத வரம் உங்களுக்கு மட்டுமே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here