இந்த 21 இலை மற்றும் பூக்களை விநாயகருக்கு வைத்து வழிபடலாம்! இதனை செய்து பாருங்கள் எவருக்கும் கிடைக்காத வரம் உங்களுக்கு மட்டுமே!

0
188

இந்த 21 இலை மற்றும் பூக்களை விநாயகருக்கு வைத்து வழிபடலாம்! இதனை செய்து பாருங்கள் எவருக்கும் கிடைக்காத வரம் உங்களுக்கு மட்டுமே!

இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு இறைவனை வழிபடுவதே நம் மரபு. அந்த வகையில் வழிபாடுகளில் பூக்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் இலைகளுக்கும் புற்களுக்கும் உண்டு. சிவபெருமானுக்குப் பெரிய பூஜைகள் செய்வதைவிட பக்தியோடு ஒரு வில்வ இலையை சமர்ப்பித்தாலே அவர் மனம் மகிழ்ந்து அருள்வார் என்கிறது லிங்காஷ்டகம். பெருமாளுக்குத் துளசி இலைகளைப்போன்ற உயர்வான சமர்ப்பணம் வேறு இல்லை. எளிமையின் வடிவான விநாயகப்பெருமானுக்கோ வன்னி இலைகள் கொண்டு செய்யும் ஆராதனை மிகவும் சக்திவாய்ந்தது என்கின்றன சாஸ்திரங்கள். மேலும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் இலைகளின் மூலம் வழிபாடு செய்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி பூஜையில் நான்குவிதமான அர்ச்சனைகள் விளக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று 108 அஷ்டோத்திர பூஜை. அது மலர்கள் மற்றும் அருகம்புல் கொண்டு செய்வது. இது தவிர 21 மலர்கள், 21 இலைகள், அருகம்புல் ஆகியன கொண்டு செய்யும் அர்ச்சனைகளும் உண்டு.

விநாயகருக்கு மிகவும் உகந்த மலர் எருக்கம்பூ மற்றும் தும்பைப் பூ. இவை எளிமையாக அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வளர்வன. விலையில்லாதவை. தானே வளரும் தன்மை கொண்டவை. இவற்றைத் தவிர புன்னை, மந்தாரை, மகிழம், பாதிரி, அரளி, ஊமத்தை, சம்பங்கி, மாம்பூ, தாழம்பூ, முல்லை, கொன்றை, செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம், கண்டங்கத்திரி ஆகியவை. இந்த 21 மலர்களும் விநாயகர் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை. இவை அனைத்தும் கிடைத்தால் அவற்றைக்கொண்டு பூஜை செய்யலாம்.

இலைகள் அதிக விலையில்லாதவை. பல இடங்களில் இலவசமாகவும் கிடைப்பவை. கிடைக்கும் இலைகளைக் கொண்டு பூஜை செய்தால் இல்லை என்பதே இல்லை என்பது அடியார் வாக்கு.

மாசி, பருஹதி எனும் கிளா இலை, வில்வம், அருக்கு, ஊமத்தை, இலந்தை, நாயுருவி, துளசி, மாவிலை, தங்க அரளி, விஷ்ணு கிரந்தி, மாதுளை, மருவு, நொச்சி, ஜாதிக்காய் இலை, நாரிசங்கை, வன்னி, அரசு, நுணா, எருக்கு, தேவதாரு ஆகிய 21 இலைகள் கணபதி வழிபாட்டுக்கு மிகவும் உகந்தவை. இவற்றுள் நம் வீட்டுக்கு அருகே கிடைக்கும் இலைகளைக் கொண்டே நாம் அர்ச்சித்தாலே போதுமானது என்றாலும் ஒவ்வொரு இலைக்கும் ஒரு விசேஷித்த பலன் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

 

author avatar
Parthipan K