உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இந்த வழக்கிற்கு வரும் 22 தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்!
கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்தார்.அந்த மனுவில் நாட்டில் மிரட்டல் ,பரிசுகள் வழங்குதல் ,பணம் வழங்குதல் மற்றும் அச்சுறுத்தல் போன்றவைகளின் மூலமாக கட்டாய மதமாற்றங்கள் நடைபெறுகின்றது.அதனை உடனடியாக தடுபதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அந்த மனுவின் விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஹிமா கோலி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது அந்த வழக்கிற்கு மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேர்த்தா ஆஜரானார்.அதன்பிறகு அவர் அவருடைய வாதத்தை தொடங்கினார்.
அந்த வாதத்தில் கட்டாய மதமாற்றம் விவகாரம் அரசமைப்புச்சட்ட நிர்ணய சபையிலேயே விவாதிக்கப்பட்டுள்ளது எனவும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தான் அதிகம் இந்த கட்டாய மதமாற்றம் நிழந்து வருகின்றது என கூறினார்.
மேலும் கட்டாய மதமாற்றம் சட்டத்திற்கு புறம்பானது என்பது பழங்குடியினர் மக்களுக்கு தெரிவதில்லை,மாதம் மாறினால் தான் பொருளுதவி போன்றவை கிடைக்கும் என நினைத்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஓடிஸா ,மத்திய பிரேதச அரசுகள் பணம் ,பொருட்கள் போன்றவைகளை வழங்கி கட்டாய மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளை தடுபதற்காக சட்டம் இயற்றியுள்ளனர்.
அந்த சட்டம் செல்லுமா என கேள்வி எழும்பொழுது இந்த சட்டம் கட்டாயம் செல்லும் என உச்சநீதிமன்றம் முன்னதாகவே தெரிவித்துள்ளது.கட்டாய மதமாற்றம் என்பது நாட்டின் பாதுகாப்பையும் ,மத சுதந்திரத்தையும் ,வழிபாட்டு உரிமை போன்றவைகளை பாதிக்கும்.அதனை தடுபதற்கு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைவருக்கும் மதவழிபாட்டு உரிமை உள்ளது.ஆனால் ஒருபோதும் எவரையும் கட்டாயபடுத்தி மதமாற்றம் செய்ய கூடாது.மேலும் கட்டாய மதமாற்றத்தை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு வரும் 22 ஆம் தேதிக்குள் விரிவான பதிலளிக்க வேண்டும் என கூறினார்கள்.மீண்டும் இந்த வழக்கு விசாரணை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.