கோலி சின்ன பையன் என விமர்சனம் செய்த பாகிஸ்தான் வீரர்

Photo of author

By Parthipan K

சர்வதேச கிரிக்கெட்டில் 12 ஆண்டுகள் நிறைவு செய்த இந்திய அணியின் கேப்டன் கோலியை பற்றி புகழ்ந்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களால் விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் கோலியைப் புகழ்ந்ததற்காக அவர் மீது கோபப்படுவதற்கு முன்பு அவர்களின் புள்ளிவிவரங்களைப் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆரம்பத்தில் இவரை பார்க்கும் போது சிறுபிள்ளை போல இருந்தார்

2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் கோலி எங்கும் காணப்படவில்லை அவர் வட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார் என்று அக்தர் கூறினார். கோலிக்கு இந்திய அணி நிர்வாகத்திடம் இருந்து கிடைத்த ஆதரவு அவரை சிறப்பாக விளையாடியது மேலும் அதனை சரியாகப் பயன்படுத்தி தொடர்ந்து பயன்படுத்திய கோலி தற்போது உலகின் நெம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார் என்று புகழாரம் சூட்டினார்.