உத்தரவை மீறி விழா நடத்திய நேபாள மக்கள்

0
129
நேபாளத்தித்தில் நேற்று தடை உத்தரவை மீறி மச்சீந்திரநாத் ஜாத்ரா தேரோட்டத்தை நடத்த உள்ளூர் மக்கள் முயற்சி செய்தனர். தேர் இழுக்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. பொதுமக்கள் கற்களை வீசி போலீசாரை நோக்கி தாக்குதல் நடத்தினர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதி போர்க்களம்போல் காட்சியளித்தது. தொடர்ந்து அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்கும் வகையில், அப்பகுதியில் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Previous articleகடந்த ஆறு மாத காலத்தில் நிலையான வைப்புத்தொகைக்கு டாப்  வங்கிகள் வழங்கிய வட்டி விகிதம் இதோ! 
Next articleஇந்தியாவின் இத்தகைய செயல் விதிமுறைகளுக்கு எதிரானது