பேருந்தை சிறை பிடித்த மக்கள்! ஈரோட்டில் பரபரப்பு!

Photo of author

By Parthipan K

பேருந்தை சிறை பிடித்த மக்கள்! ஈரோட்டில் பரபரப்பு!

Parthipan K

The people who caught the bus! Sensation in Erode!

பேருந்தை சிறை பிடித்த மக்கள்! ஈரோட்டில் பரபரப்பு!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பணிமனை பகுதியில் 43ம் எண் கொண்ட அரசு டவுன் பஸ் கொடுமுடியில் இருந்து ஈரோடு வரை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் ஈரோட்டில் இருந்து கொடுமுடிக்கு 43 ம் எண்  பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஊஞ்சலூர் அருகே உள்ள மணிமுத்தூர் பேருந்து நிலையத்தில் பெண்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் பேருந்தை நிறுத்த முயன்றுள்ளனர் ஆனால்  பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. அதனால் ஆவேசம் அடைந்த பெண்கள் நடந்து சென்று ஊஞ்சலூர் பேருந்து நிலையத்திற்கு வந்து காத்துகொண்டிருந்தனர். இதனையடுத்து கொடுமுடியில் இருந்து ஈரோடு நோக்கி 43 ம் எண் கொண்ட டவுன் பஸ் ஊஞ்சலூர் பேருந்து நிலையத்திற்கு வந்தது.

இந்நிலையில்  அங்கு காத்துகொண்டிருந்த பெண்கள் அந்த பேருந்தை சிறை பிடித்தனர். அப்போது அந்த பெண்கள் டிரைவர்யிடம் நாங்கள் கை காட்டிய போது ஏன் நிற்கவில்லை என கேள்வி எழுப்பினார்கள். அப்போது ஓட்டுனர்க்கும் அங்கிருந்த பெண்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த இடத்தில் இருந்த அனைவரும் அந்த பேருந்தை சிறைப்பிடித்திருந்த பெண்களை சமாதானப்படுத்தினார்கள் .அதன் பிறகு அந்த பேருந்து ஈரோடு நோக்கி சென்றது. இந்த சம்பவம் ஊஞ்சலூரில் பரபரப்பு ஏற்பட்டது.