மலையில் நின்று செல்பி எடுத்த நபர்… சிறிது நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட சோகம்… 

0
33

 

மலையில் நின்று செல்பி எடுத்த நபர்… சிறிது நேரத்தில் அவருக்கு ஏற்பட்ட சோகம்…

 

கிருஷ்ணகிரி அருகே மலைப்பகுதியில் நின்று செல்பி எடுத்த நபரை மறுநாள் காலையில் மீட்பு படையினர் ஸ்டரக்சரில் அழைத்து வந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திரப் பிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த 25 வயதான அமித் குமார் கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள மரக்கடை ஒன்றில் தங்கி வேலை செய்து வருகிறார். அமித் குமார் நேற்று(ஆகஸ்ட்14) காட்டுநாயனப்பள்ளி பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

 

தரிசனம் முடித்த அமித் குமார் அருகே உள்ள மலைப் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு உள்ள ஒரு பாறையின் மீது ஏறி செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு வந்த குரங்குகளை பார்த்து அச்சத்தால் நிலை தடுமாறிய அமித் குமார் கீழே விழந்துள்ளார். கீழே விழுந்த அமித் குமார் பாறைகளின் இடுக்கில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.

 

பாறையின் இடுக்கில் சிக்கிக் கொண்ட அமித் குமார் அவர்களால் வெளியே வரமுடியாததால் அங்கேயே சிக்கிக் கொண்டார். இதையடுத்து அமித் குமார் அவர்கள் கீழே விழுந்த தகவல் இன்று தீயணைப்பு வீரர்களுக்கு கிடைத்துள்ளது.

 

இந்நிலையில் இன்று அதிகாலை அமித் குமார் சிக்கியுள்ள மலைப் பகுதிக்கு தீயணைப்பு வீரர்களும் மீட்பு படை வீரர்களும் சென்றனர். சுமார் 3 மணி நேரம் போராடி அமித் குமார் அவர்களை பாறையின் இடுக்குகளில் இருந்து மீட்டனர்.

 

பின்னர் அமித் குமாரை தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் ஸ்ட்ரக்சர் மூலமாக கீழே அழைத்து வரப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். செல்பி எடுக்க முயன்ற அமித் குமார் ஸ்ட்ரக்சர் மூலமாக அழைத்து வரப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.