மின்கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய விமானம்! அதிர்ச்சியில் பொதுமக்கள் 

Photo of author

By CineDesk

மின்கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய விமானம்! அதிர்ச்சியில் பொதுமக்கள் 

CineDesk

The plane hit the electric pole and hung in the distance! Public in shock

மின்கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய விமானம்! அதிர்ச்சியில் பொதுமக்கள்

மின்கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய விமானத்தால் அப்பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மின் கம்பி மீது நேற்று இரவு 2 நபர் பயணித்த சிறிய ரக விமானம் மோதி அந்தரத்தில் தொங்கியது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம் மொவ்ண்ட்கொமெரி நகரில் ஹைதுர்பர்க் என்ற பகுதியில் இந்நிகழ்வு நடைபெற்றது. அங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் உள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அங்கு இரு நபர் பயணித்த விமானம் மோதியதால் மின் இணைப்பு தடைபட்டது. இதனையடுத்து அங்குள்ள 1 லட்சம் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் மின் இணைப்பு தடைபட்டுள்ளதால் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மீட்பு குழுவினரிடம் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

அங்கு மின் கம்பி மீது விமானம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்ததையும் அதனுள் இரு நபர் உயிருடன் உள்ளதை அறிந்த மீட்பு குழுவினர் அவர்களை பத்திரமாக மீட்டனர்.

மேலும், விமானம் மோதியதால் இருளில் மூழ்கிய மொவ்ண்ட்கொமெரி நகருக்கு மின் இணைப்பை மீண்டும் வழங்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து கூடிய விரைவில் மின் கம்பிகள் சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.