நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று தீடீர் உயர்வு! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் அனைவரும் ஏதேனும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள்.அதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தையே சந்தித்து வந்தது.மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகின்றது.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஜனவரி மாதம் வரை தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகை வந்தது அதன் காரணமாக தங்கத்தின் விலை தொடரந்து ஏறு முகத்தையே சந்தித்து வந்தது.நேற்று காலை நிலவரத்தின் படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ 12 குறைந்தது.அதனால் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராமுக்கு 5338 ரூபாய்க்கு விற்பனையானது.அதனை தொடரந்து சவரன் ஒன்றுக்கு 96 ரூபாய் குறைந்து ரூ 42,702 க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று ஒரு பவுனுக்கு ரூ176 அதிகரித்து ரூ42,880 க்கு விற்பனை செய்யப்படுகின்றது.அதுபோலவே கிராமுக்கு ரூ 22 அதிகரித்து ரூ5,338 க்கு விற்பனையாகின்றது.அதனை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது.அந்தவகையில் கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ 74.80 க்கு விற்கப்படுகிறது.1 கிலோ பார் வெள்ளி ரூ 74,800 க்கு விற்பனையாகிறது.