கடைசி டி20 போட்டி! நியூசிலாந்தை வென்று பதிலடி கொடுக்குமா இந்தியா!

0
101

கடைசி டி20 போட்டி! நியூசிலாந்தை வென்று பதிலடி கொடுக்குமா இந்தியா! 

இன்று நடக்கும் கடைசி டி20 போட்டியில் நியூசிலாந்து அணியை வென்று இந்திய அணி கோப்பையை தட்டிச் செல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது?

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் போட்டிகளில் 0-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.

அடுத்து  தொடங்கிய டி20 போட்டியில் ராஞ்சியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில்  1-0 என்ற கணக்கில் இந்திய அணியை வெற்றி பெற்றது.

இதை அடுத்து இரண்டாவது டி20 போட்டி லக்னோவில் கடந்த 29ஆம் தேதி நடைபெற்றது. இதில் அபாரமாக விளையாடிய இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 3-வது  மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு தொடங்க இருக்கிறது. இரு அணிகளும் சமநிலையில் உள்ளதால் இன்று நடைபெறும் போட்டியை வெற்றியை தீர்மானிக்கும் என்பதால் இரு அணி வீரர்களும் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளனர்.

கடந்த போட்டியில் இரு அணி வீரர்களும் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டி20 மேட்ச் போன்று இல்லாமல் டெஸ்ட் மேட்ச் போன்று இருந்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் எதிரணி வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனிடையே போட்டியானது தொடரை வெல்லப்போவது யார்? என தீர்மானிக்கும் கடைசி போட்டி என்பதால் இதில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது கடினம் என்பது நியூசிலாந்து வீரர்களுக்கு நன்கு தெரியும்.

இதற்குச் சான்றாக கடந்த கால வரலாறுகள் உள்ளன. பத்தாண்டுகளில் நடந்த 55 இருதரப்பு போட்டிகளில் 47 இல் இந்திய அணி வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது என்பதே இதற்கு சாட்சியாகும். 2012 இல் நடந்த ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே நியூசிலாந்து அணி வென்றுள்ளது. மற்ற எந்த இரு தரப்பு போட்டியிலும் வெற்றியை பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் நியூசிலாந்து அணி இந்த சோக வரலாற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்குமா? இல்லை ஹர்திக் பாண்டே தலைமையிலான இந்திய அணி வெற்றி நடை போட்டு கோப்பையை கைப்பற்றுமா? என்று இன்று இரவு தெரிந்து விடும்.