ஆபரண தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! கோல்ட் வாங்க இது தான் சரியான நேரம்!!
வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வரும் தங்கத்தால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி அணியும் ஆபரணம் தங்கம்.வீட்டு விசேஷங்களில் தங்கத்தின் தேவை இன்றியமையாதது.
கடந்த சில வாரங்கங்களாக தங்கம் கடும் விலை ஏற்றத்தை கண்டு வந்த நிலையில் இன்று அதன் விலை சற்று குறைந்து இருக்கிறது.
அதாவது நேற்று(ஏப்ரல் 19) ஒப்பிடுகையில் இன்று(ஏப்ரல் 20) அதன் விலை சற்று குறைந்து இருக்கிறது.சென்னையில் நேற்று 1 கிராம் ரூ.6,890க்கும் 1 சவரன் ரூ.55,120க்கும் விற்பனையான நிலையில் இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்து 1 கிராம் ரூ.6,885க்கும் சவரனுக்கு ரூ.40 குறைந்து 1 சவரன் ரூ.55,080க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.அதேபோல் 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து 1 கிராம் ரூ.7,511க்கும் சவரனுக்கு ரூ.40 குறைந்து 1 சவரன் ரூ.60,088க்கும் விற்பனையாகின்றது.
மேலும் வெள்ளி விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ.90க்கும் ஒரு கிலோ ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இன்று தங்கம் விலை சற்று குறைந்து இருப்பதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.