கள்ள ஓட்டு போட்டுட்டாங்க..மறுவாக்குப்பதிவு நடத்தனும்..கதறும் தமிழிசை செளந்தரராஜன்..!!

0
689

கள்ள ஓட்டு போட்டுட்டாங்க..மறுவாக்குப்பதிவு நடத்தனும்..கதறும் தமிழிசை செளந்தரராஜன்..!!

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக நடந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 69.46% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. சில இடங்களில் குளறுபடி, பிரச்சனைகள் நடந்தாலும் பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். 

அதன்படி அவர் கூறியதாவது, “தேனாம்பேட்டை கணபதி காலனியில் பாஜக பூத் ஏஜென்டுகளை தாக்கிவிட்டு திமுகவினர் கள்ள ஓட்டுக்களை போட்டுள்ளனர். மேலும், மயிலாப்பூரிலும் எங்கள் பூத் ஏஜென்டுகளை வெளியே அனுப்பி விட்டு 50 பேர் புகுந்து கள்ள ஓட்டு போட்டுள்ளனர். இதனால் தென் சென்னை தொகுதிக்குட்பட்ட 13வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும். 

இதுமட்டுமல்ல சாலிகிராமம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளிலும் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயற்சி செய்துள்ளனர். ஆனால் எங்கள் நிர்வாகிகள் அவர்களை தடுத்து விட்டனர். அதேபோல் வேண்டுமென்றே பாஜக ஆதரவு வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமென” கோரிக்கை விடுத்துள்ளார்.  

ஏற்கனவே கோவையில் ஒரு லட்சம் பாஜக ஆதரவு வாக்களார்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று கூறி மாநில பாஜக தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், பாஜக சார்பில் தென்சென்னையில் போட்டியிட்ட தமிழிசை செளந்தரராஜனும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டுமென கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.