இந்தியர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்

Photo of author

By Parthipan K

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசும்போது நீண்ட காலமாக இருநாடுகளும் நட்பு தொடர்ந்து வருகிறது. இந்த இருநாட்டு உறவுகளுக்கும் இடையில் நம்பிக்கை மற்றும் மரியாதையை அடித்தளமாக கொண்டு எழுப்பட்டது. இந்த நட்பு மிகவும் ஆழமானது ஒரு முறை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் எங்கள் நாட்டிற்கு வந்த போது கலச்சார முறையில் நாம் வேறுபட்டு இருந்தாலும்  ஒரே விஷயத்தில்தான் நம்பிக்கை வைத்துள்ளோம். இந்த உறவை நானும்  பிரதமர் மோடியும் வலுவாக அமைத்துள்ளோம் என்று கூறினார்.