சம்மரில் ஏற்படும் வியர்க்குரு பிரச்சனை.. இதை செய்தால் உடனே மறைந்து விடும்!!

Photo of author

By Divya

சம்மரில் ஏற்படும் வியர்க்குரு பிரச்சனை.. இதை செய்தால் உடனே மறைந்து விடும்!!

வெயில் காலத்தில் ஏற்படக் கூடிய தோல் பாதிப்புகளில் ஒன்று வியர்க்குரு.இவை ஏப்ரல்,மே மாதங்களில் தான் அதிகளவு தோன்றும்.முகம்,கை,கழுத்து,கால்களை சுற்றி சிறு சிறு கொப்பளங்கள் உருவாகி அதிகளவு எரிச்சலை உண்டு பண்ணும்.

இந்த கொப்பளங்களை உடைக்கவோ,அழுத்தவோ கூடாது.உடலில் அதிகளவு உஷ்ணம் ஏற்படுவதால் வரக் கூடிய இந்த கொப்பளங்களின் மீது பவுடர் போட்டால் அவை பாதிப்பை இன்னும் அதிகப்படுத்தும்.இந்த வியர்க்குரு குழந்தைகளுக்கு தான் அதிகளவு ஏற்படுகிறது.

எனவே இயற்கையான பொருட்களை கொண்டு வியர்க்குரு கொப்பளங்களை மறைய வைப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை
2)மஞ்சள் கிழங்கு
3)முல்தானி மெட்டி
4)தயிர்
5)சாதம் வடித்த கஞ்சி

செய்முறை:-

ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு இதனுடன் ஒரு கஸ்தூரி மஞ்சள் கிழங்கு சேர்த்து மைய்ய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த பவுடரை ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு கிண்ணம் எடுத்து அரைத்த வேப்பிலை + மஞ்சள் பொடி தேவையான அளவு மற்றும் முல்தானி மெட்டி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கலக்கவும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தயிர்,3 தேக்கரண்டி வடித்த கஞ்சி சேர்த்து பேஸ்ட் போல் கலக்கி உடலில் உள்ள வியர்க்குரு மீது பூசி ஒரு மணி நேரம் கழித்து குளிப்பதன் மூலம் அவை சில தினங்களில் மறைந்துவிடும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)சந்தனம்
2)ரோஸ் வாட்டர்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 3 தேக்கரண்டி சந்தன தூள் மற்றும் 3 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கவும்.

இதை உடலில் உள்ள வியர்க்குரு மீது பூசி ஒரு மணி நேரம் கழித்து குளிப்பதன் மூலம் அவை சில தினங்களில் மறைந்துவிடும்.அதேபோல் பிரஸ் கற்றாழை ஜெல்லை வியர்க்குரு மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் குணமாகிவிடும்.