ஓடிடியில் திரைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!!! விஜய்யிடம் திட்டு வாங்கிய தயாரிப்பாளர்!!!
திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட்டதால் தயாரிப்பாளர் லலித் குமார் அவர்கள் நடிகர் விஜய் அவர்களிடம் திட்டு வாங்கியதாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
லியோ திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லலித் குமார் அவர்கள் லியோ திரைப்படம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் அவர்களிடம் திட்டு வாங்கய சம்பவம் குறித்து லலித் குமார் அவர்கள் கூறியுள்ளார்.
இது குறித்து லலித் குமார் அவர்கள் “ஒரே நேரத்தில் நடிகர் சியான் விக்ரம் அவர்கள் நடித்த மகான் திரைப்படமும் கோப்ரா திரைப்படமும் என்னிடம் இருந்தன. இதில் மகான் திரைப்படம் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்தது. கோப்ரா படத்தின் ஷூட்டிங் இழுத்துக் கொண்டு சென்றது.
அப்பொழுது ஒரு திரைப்படத்தை ரிலீஸ் செய்தால் பொருளாதார ரீதியாக சிறிது ரிலாக்ஸ் ஆகி விடலாம் என்று நான் நினைத்தேன். மேலும் கோவிட் காலகட்டம் முடிந்து திரையரங்குகள் திறக்கப்பட்டதால் திரையரங்குகளுக்கு கூட்டம் வருமா என்ற சந்தேகம் இருந்தது.
இதனால் நான் கார்த்திக் சுப்புராஜ் அவர்களிடம் நாம் இருவரும் இணைந்து இன்னொரு திரைப்படம் உருவாக்கும் பொழுது அந்த திரைப்படத்தை மிகப் பெரிய அளவில் வெளியிட்டு உங்கள் விருப்பத்தை பூர்த்தி செய்கின்றேன் என்று கூறி அவரை சமாதானம் செய்தேன். பின்னர் மகான் திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்தேன்.
ஆனால் மகான் திரைப்படத்தை நடிகர் விஜய் அவர்கள் பார்த்த பிறகு எனக்கு கால் செய்து என்னை திட்டினார். மகான் திரைப்படம் ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம். இந்த திரைப்படத்தை ஏன் ஓடிடியில் ரிலீஸ் செய்தீர்கள் என்று என்னை திட்டினார்” என்று கூறினார்.